டிசம்பர் வரை தேவையான அரிசி நாட்டில் கையிருப்பில் உள்ளது

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போதுமான அரிசி தொகை நாட்டில் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பற்றாக்குறையாக உள்ள அரிசி தொகை வர்த்தக அமைச்சினால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வருடாந்த அரிசி நுகர்வானது 24 இலட்சம் மெற்றிக் டன்னாக உள்ளநிலையில், வருடாந்த அரிசி உற்பத்தியானது 16 இலட்சம் மெற்றிக் டன்னாக காணப்படுகிறது. இந்த அறுவடையானது 8 மாத காலப்பகுதிக்குப் போதுமானதாகும். எனவே, நான்கு மாத காலப்பகுதிக்கு அரிசி பற்றாக்குறையாகும் […]
கடன் தவணை செலுத்துவதை இடைநிறுத்துவதாக குத்தகை கடன் செலுத்துவோர் அறிவிப்பு

மக்களின் பொருளாதார நிலைமை காரணமாக கடன் தவணை செலுத்துவது இன்று முதல் இடைநிறுத்தப்படும் என குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் ஒன்றிணைந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று (09) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் பொதுச் செயலாளர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய, ஐந்து விடயங்களை முன்வைத்து, குத்தகை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்படும் எனவும், அதற்கான உடன்பாடு எட்டப்படும் வரை இந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார். குத்தகை மற்றும் […]
எரிவாயு வழங்க 37.5 மில்லியன் டொலரை பிணையாக கோரிகிறது

தற்போது நாட்டிற்கு எரிவாயுவை விநியோகிக்கும் ஓமான் நிறுவனத்தை விடவும் குறைந்த விலையில் எரிவாயுவை வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட தாய்லாந்து சியேம் நிறுவனம் பிணையமாக 37.5 மில்லியன் டொலரை கோரியுள்ளது. அந்த நிதியை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அந்த நிறுவனத்துடன் இன்னும் ஒப்பந்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிறுவனத்தை விட 9 மில்லியன் டொலருக்கும் குறைவான விலையில் எரிவாயுவை வழங்க தாய்லாந்து சியேம் நிறுவனம் விருப்பம் வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்திடம் […]
இலங்கை இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.06.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை

நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களுளில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்த தடையும் இன்றி அதனை அணிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. அத்துடன், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது பொறுத்தமானது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். […]
5 நீர் மின் நிலையங்கள் செயலிழப்பு

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முழுமையான பங்களிப்பு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நீர்மின் உற்பத்தி சிலவற்றின் தொழிற்பாடுகள் செயலிழந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். லக்ஷபான, நவலக்ஷபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் கெனியோன் ஆகிய 5 நீர்மின் நிலையங்களின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன. இதன்காரணமாக குறித்த நீர்மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்க பெறும் 300 மெகாவொட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது […]
எரிபொருள் பெற 4 ரஷ்ய நிறுவனங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய 40,403 மில்லியன் ரூபா 81 சதத்தை நிலுவையில் வைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இலங்கை மின்சார சபைக்கும் வருடத்திற்கு 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரிவித்தார். எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 […]