எரிபொருள் அளவை அறிய விசேட இணையத்தளம்!

எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள், எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதேநேரம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில், கையிருப்பில் உள்ள எரிபொருள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும், தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமும் (ICTA) இணைந்து இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. www.fuel.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம், பொதுமக்கள், தங்களது மாகாண, மாவட்ட மற்றும் நகரங்களின் விபரங்களை உள்ளீடு செய்து, குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

எரிவாயு கப்பலுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை!

3,900 மெட்ரிக் டன் எரிவாயுடன் நாட்டை வந்தடைந்துள்ள கப்பலுக்கு, செலுத்தப்படவேண்டிய 2.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு இதுவரையில் செலுத்தப்படாதுள்ளது. இதன் காரணமாக, மறு அறிவித்தல் வரையில், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் எரிவாயு நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு எரிவாயு நிறுவனம் கோரியுள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி […]

8 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளன!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 8 மில்லியன்பைஸர் தடுப்பூசிகள், அடுத்த மாத முற்பகுதியில் காலாவதியாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 20 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்காக, 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. எவ்வாறிருப்பினும், 20 வயதிற்கு மேற்பட்டவர்களில், 54 சதவீதமானோர் மாத்திரமே இதுவரையில் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இதன் காரணமாக, எஞ்சியுள்ள 8 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள், அடுத்த மாத முற்பகுதியில் காலாவதியாக உள்ளதென பொது சுகாதார பரிசோதகர்கள் […]

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசியின் உச்சபட்ச சில்லறை விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விலைகளை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள […]

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே கையிருப்பில் மிஞ்சி உள்ளதாகவும் இதனால் உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தைகளுக்கு எந்த விதமான ஸ்திரத்தன்மையையும் காணப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்து 812 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட […]

சிங்கப்பூரிடம் கடன் கேட்கும் இலங்கை

சிங்கப்பூரிடம் இருந்து பிரிட்ஜ் லோன் என்ற இடைக்கால நிதியுதவி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதற்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் சிங்கப்பூருக்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். சிங்கப்பூர் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை மையமாகக் கொண்டதாக அமைந்திருந்தது. இடைக்கால நிதியுதவியைப் பெறுவது, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான […]

இலங்கையின் 4.9 மில்லியன் மக்களுக்கு உணவு தேவை -ஐ.நா

இலங்கையின் சனத்தொகையில் 22% அல்லது 4.9 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் தற்போதைய உணவு நெருக்கடிக்கு பல காரணிகள் பங்களித்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனி சீகர் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியானது இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2021-22 மஹா பருவங்களில் நெல் அறுவடை ஐம்பது சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். 10 வீத மக்களுக்கு இலவசமாக உணவு […]