2.5% புதிய வரி இலங்கையில் அமுல்

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆண்டொன்றுக்கான மொத்த விற்பனைப் புரள்வு 120 மில்லியன்களை அதிகரிக்கும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு 2.5% சதவீதத்தின் கீழ் புதிய வரியாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் […]
இலங்கைக்கு உதவ அமெரிக்கா இணக்கம்

இலங்கைக்கு உதவ அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கன் இணக்கம் வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதன் பிறகு முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் உறுதியளித்துள்ளார் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com ⏰ யாழில் […]
மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி தொகை கண்டுபிடிப்பு

நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சிலாபத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் 5 கிலோகிராம் எடையுள்ள சம்பா அரிசியின் 100 மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை […]
அரிசி விற்பனை செய்ய 4 வர்த்தக நிலையங்களுக்குத் தடை

பதுளை பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களிலும் நுகர்வோர் அதிகாரசபையினால் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மறுஅறிவித்தல் வரை குறித்த வர்த்தக நிலையங்களில் அரிசி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை […]
வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை

இந்த வாரத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், நீர் வழங்கல், சுகாதாரம், மின்சார விநியோகம், கல்வி, பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் உள்ளடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பயணிகளுக்கு கடுமையான போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. […]
பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் கப்பல் சேவைகள்

திருச்சிக்கும் பலாலிக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்கவும் பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவைகளை நடத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த சேவைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எமதுச் செய்தி சேவைக்கு குறிப்பிட்டார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் […]
7 நாட்களாக கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது.

எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார். வங்கிகளுக்கு இடையில் நிலவிய தொழிநுட்ப கோளாறு காரணமாக கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சில இடங்களில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியிருந்தன. ஒருகொடவத்த பகுதியில் நேற்றிரவு எரிபொருள் கோரி மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதோடு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. […]