மீன்களின் விலை அதிகரிப்பு

சந்தைகளில் மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, தலபத் மீன் கிலோ ஒன்று 2,200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதுடன், சாதாரண சூடை மீன் 800 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, மீன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து […]
பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியாவிலிருந்து நிதி, சீனாவிலிருந்து சீருடை

பாடசாலை உணவுக்காக ஒதுக்கப்படும் கொடுப்பனவை இரட்டிப்பாக்குமாறு அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் அடுத்த வருடத்துக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த மதிப்பீடுகள் திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மேலும், அடுத்த வருடத்துக்குத் தேவையான 50% பாடசாலைச் சீருடைகளை வழங்க சீனா ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மீதமுள்ள சீருடை ஒதுக்கீட்டுக்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். 🛒 […]
சீனாவிலிருந்து இலங்கைக்கு அரிசி

சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijiang தனது டுவிட்டர் கணக்கில், முதல் தொகுதி அரிசி கப்பலில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த மனிதாபிமான 500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துகளின் முதல் தொகுதி அண்மையில் ஹொங்கொங்கில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி […]
அதிக விலைக்கு அரிசி விற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் மற்றும் பதுக்கி வைக்கும் வர்த்தகர்கள், ஆலை உரிமையாளர்களைத் தேடி அம்பாறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் தற்போது அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி இன்று சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நாவிதன்வெளி, மத்திய முகாம் போன்ற பிரதேசங்களில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் கண்காணிப்பு நடவடிக்கை […]
டொலர் இன்மையால் கரைக்கு வராத கப்பல்!

லிற்றோ எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்த 3, 900 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் வந்த கப்பலுக்கு, டொலர் செலுத்த முடியாத காரணத்தால் கப்பல் கரை தட்டவில்லை. கடந்த ஐந்து நாட்களாக அக்கப்பல் கடலில் காத்து நிற்கின்றது. இந்தக் கப்பலில் உள்ள எரிவாயுவுக்கு 2.5 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன் கப்பலுக்கு இதுவரை தாமதக் கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் லிற்றோ நிறுவனம் தெரிவிக்கின்றது. மேலும் குறித்த கப்பல் கடந்த 8ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்துக்கு வந்து […]
தந்தையை அடித்துக் கொன்ற மகன்

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். இக்கொலைச் சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவருக்கு வயது 66 . குடிபோதையில் வந்த மகன் அவரது மனைவியைத் தாக்கிய போது அவரைக் காப்பற்ற முற்பட்ட தந்தையை தடியால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கொலையுடன் தொடர்புடைய 34 வயது சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]
எரிபொருள் முன்பதிவுகள் குறைந்து வருகின்றன

எரிபொருள் நெருக்கடி காரணமாக பௌசர்களுக்கு பெறப்படும் எரிபொருள் முன்பதிவுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோலை விட டீசல் முன்பதிவுககளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதன் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார். போதிய எரிபொருள் கையிருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்கிறது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]