மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி தொகை கண்டுபிடிப்பு

நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சிலாபத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் 5 கிலோகிராம் எடையுள்ள சம்பா அரிசியின் 100 மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை […]

அரிசி விற்பனை செய்ய 4 வர்த்தக நிலையங்களுக்குத் தடை

பதுளை பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களிலும் நுகர்வோர் அதிகாரசபையினால் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மறுஅறிவித்தல் வரை குறித்த வர்த்தக நிலையங்களில் அரிசி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை […]

வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை

இந்த வாரத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், நீர் வழங்கல், சுகாதாரம், மின்சார விநியோகம், கல்வி, பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் உள்ளடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பயணிகளுக்கு கடுமையான போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. […]

பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் கப்பல் சேவைகள்

திருச்சிக்கும் பலாலிக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்கவும் பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவைகளை நடத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த சேவைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எமதுச் செய்தி சேவைக்கு குறிப்பிட்டார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் […]

7 நாட்களாக கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது.

எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார். வங்கிகளுக்கு இடையில் நிலவிய தொழிநுட்ப கோளாறு காரணமாக கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சில இடங்களில் அமைதியின்மை சம்பவங்களும் பதிவாகியிருந்தன. ஒருகொடவத்த பகுதியில் நேற்றிரவு எரிபொருள் கோரி மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதோடு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. […]

அடகு வைத்த நகைகளை மீளப் பெறுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அடகு வைத்த நகைகளை மீளப் பெறுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அடகு பிடிக்கும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நகைகளை அடகு வைக்க வருபவர்களுக்கு போதிய பணத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். சில அடகு பிடிக்கும் நிலையங்கள் ஒரு பவுண் தங்கத்துக்கு வழங்கும் கட்டணத்தை ஒரு லட்சம் ரூபா வரை குறைத்துள்ளன. இதற்கு முன்னர் ஒரு பவுண் தங்க நகைக்கு 120,000 முதல் 140,000 ரூபா வரை வழங்கப்பட்டது. […]

கொழும்பில் மூடப்படும் சிற்றூண்டிச்சாலைகள்

இலங்கையில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது எரிவாயு கிடைக்காத காரணத்தினால் பலர் தங்களின் தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களது குடும்பத்தினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்கள் பாரிய பொருளாதார […]