கொழும்பில் நாளாந்தம் வீசப்படும் 300 மெட்ரிக் தொன் சமைத்த உணவு!

கொழும்பில் உள்ள உணவகங்களிலிருந்து தினசரி உணவுக் கழிவுகளை மேல் மாகாணத்தில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் மாதாந்தம் சுமார் 30 மில்லியன் ரூபா வருமானம் ஈட்ட முடியும் என கொழும்பில் உள்ள உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற கழிவு உணவுகள் கிலோ ரூ.15-25இற்கு விற்கப்படுவதாகவும், முறையாக அகற்றுவதற்கு இடமில்லாததால் பன்றி பண்ணைகளுக்கு வழங்கப்படுவதாகவும் சில உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நாளொன்றுக்கு சுமார் 20 கிலோ சமைத்த உணவுகள் […]
வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தில் புதிய ஒழுங்குவிதி

2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22ஆம் உறுப்புரையின் கீழ் புதிய ஒழுங்குவிதி ஒன்றை வெளியிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சலில் இடம்பெறும் ஒருசில மூலதனக் கொடுக்கல் வாங்கல்களுக்காக 06 மாதகாலத்திற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்காக குறித்த ஒழுங்குவிதி ஒன்றை வெளியிட கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் […]
அருந்தும் தேநீரின் அளவை குறைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

அருந்தும் தேநீரின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அந்நாட்டு அரசாங்கத்தினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
யாழ். – பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை

யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும்,பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளது அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் இதனூடாக மண்ணெண்ணெய் ,டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் தேவையானளவு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை

இவ்வருடத்தின் எஞ்சியுள்ள காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலாத் துறைசார் முக்கியஸ்தர்களுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடத்திய கலந்துரையாடலின் போதே அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துறையாடல் நேற்று இடம்பெற்றது.இதன் போது பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். எதிர்வரும் 6 மாதங்களில் ஆகக்கூடுதலான இந்திய […]
அரிசி மோசடியாளர்களை சுற்றிவளைக்க பாதுகாப்பு பிரிவு!

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சபட்ச சில்லறை விலையை விடவும், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்கள் மற்றும் அரிசியைப் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பான சுற்றிவளைப்புக்களை துரிதப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அகில இலங்கை தொழிலற்றோர் சங்கத்தினருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறித்த சுற்றிவளைப்புக்களை துரிதப்படுத்துவதற்கு அதிகாரிகளுக்கு பற்றாக்குறை நிலவுமாயின், பாதுகாப்புத் தரப்பினரின் உதவியைப் […]
விவசாய குடும்பங்களுக்கு 365,000 யூரியா மூடைகள்!

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு எதிர்வரும் பெரும்போகத்திற்காக 365, 000 யூரியா பசளை மூடைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரு விவசாய குடும்பத்திற்கு தலா ஒரு யூரியா மூடை வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த பெரும்போகத்தின் போது பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குறைந்த வருமானம் பெறும் 14,000 குடும்பங்களுக்கு பாசிப்பயறு செய்கைக்கான நிதியுதவி வழங்க உலக சுகாதார மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது. […]