கடன் கடிதத்தை திறந்தது மக்கள் வங்கி!

பெற்றோல் இருப்பை கொள்வனவு செய்வதற்கும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் 42.6 மில்லியன் டொலர் கடன் கடிதத்தை மக்கள் வங்கி திறந்து வைத்துள்ளது. இதன்மூலம் ஒக்டேன் 92 பெற்றோலின் 300,000 பீப்பாய்களைக் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் பெற்றோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 […]
எரிபொருள் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படலாம்

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் முறைப்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு லீற்றர் எரிபொருளின் விலையும் 100 ரூபாவால் அதிகரிக்கப்படலாம் எனவும் அவர் கூறுகிறார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் […]
கொழும்பு மாவட்டம் அதிக ஆபத்தில் உள்ளது

டெங்கு தொற்று மற்றும் நுளம்பு பெருக்கம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்கள் வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டொக்டர். பிரசாத் கொலபாகே, கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில், 31,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர் , ஆனால் கடந்த ஆறு மாதங்களில், 25,000 இற்கும் […]
அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்ட ஜனாதிபதி யோசனை

அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்டுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில் துறையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். நீண்டகாலமாக இருக்கின்ற விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் முதலீட்டிற்கு கடுமையான தடையாக உள்ளன. முதலீட்டை ஊக்குவிப்பதற்காக புதிய உத்திகளைக் கையாண்டு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு பாரியளவு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்காக நேற்று கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் […]
இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட(16.06.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
உணவுப் பொருட்கள் பதுக்கல்: தடுக்க புதிய சட்டம்

அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிய கடன்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். அரிசி ஆலைகள் மற்றும் பாரிய நெல் களஞ்சியசாலை உரிமையாளர்கள் எதிர்காலத்தில் உணவுப்பொருட்களை சேமித்து வைப்பதை தடுப்பதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றும் என்றும் பிரதமர் கூறினார். வங்கிகள் கோரிய கடன்களை போதிய அளவில் வழங்காத நிலையில், அரிசி கையிருப்பு பதுக்கி வைக்கப்படுவதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, பிரதமரிடம் தெரிவித்தார். […]
பாவனையாளர் அதிகாரசபையினரால் விசேட சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கு அமைய மட்டக்களப்பு நகர் மற்றும் நகர் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகளில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்ட நடவடிக்கை மட்டக்களப்பு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில் […]