நீண்டு சென்ற பெற்றோல் வரிசை!

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்ள ஓட்டமாவடி பிரதேசத்தையும் தாண்டி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறித்த எரிபொருள் நிலையத்தில் நேற்று பெற்றோல் விநியோகிக்கப்படும் எனும் தகவலை அறிந்து கொண்ட பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை முதல் வரிசையில் காத்து நிற்கின்றனர். இந்த வரிசை வாழைச்சேனையிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் தாண்டி ஓட்டமாவடி வரை நீண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து […]
காய்கறிகள் வரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும்

அடுத்த மூன்று மாதங்களில் சந்தைக்கான காய்கறிகள் வரத்து முற்றாக நிறுத்தப்படும் என பொருளாதார மையங்கள் மற்றும் மெனிங் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது 50% சிறு காய்கறி விவசாயிகள் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பயிர்ச்செய்கையில் இருந்து விலகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். டிசம்பர் மாதத்திலும் இது தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கப்பட்டதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நாட்டில் மரக்கறிகளுக்கு […]
இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366.32 ரூபாவாகவும் கொள்விலை 355.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்விலை 435.13 ரூபாவாகவும் விற்பனை விலை 452.22 ரூபாவாகவும், அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 259.26 ரூபாவாகவும் கொள்விலை 247.82 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் […]
அரிசி விலையை தீர்மானிப்பதில் சிக்கல்!

பாரிய அளவான அரிசி ஆலை உரிமையாளரினால் நாட்டில் அரிசி விலையை தீர்மானிப்பது நகைப்புக்குரிய விடயம் என முன்னாள் விவசாயப் பணிப்பாளர் நாயகம் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் பாரியதொரு அரிசி மாப்பியா தொடர்பான விபரம் வெளிப்பட்டுள்ளது. இந்த நாட்டில், பிரதான அரிசி ஆலை உரிமையாளரான டட்லி சிறிசேன, அரிசியை விற்பனை செய்யும் விலைகள் தொடர்பில் அரிசி உரிமை உரிமையாளர்களிடம் யோசனைகளை […]
சிறுபோகத்திற்குத் தேவையான உர விநியோகம் விரைவில்

சிறுபோகத்திற்குத் தேவையான உரத்தை எதிர்வரும் 4ஆம் திகதி விநியோகிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதனை விரைவாக விவசாயிகளுக்கு கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஒவ்வொருபோகத்திற்கும் தேவையான உரத்தை உரிய காலப்பகுதியில் விவசாயிகளுக்கு வழங்குவது தொடர்பில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com […]
அவுஸ்திரேலியாவிடம் இருந்து 50 மில்லியன் டொலர்

இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளை வழங்கவுள்ளது. இலங்கையில் உள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இது மருந்து, உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. இலங்கையில் உள்ள, 3 மில்லியன் மக்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய அவசர உணவு உதவிக்காக உலக உணவு திட்டத்திற்கு, அவுஸ்திரேலியா […]
ரஷ்ய பிரஜை எரிபொருள் பெறமுயன்றதால் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருக்கின்றனர். இதேவேளை, ஹப்புத்தளை நிரப்பு நிலையத்தில் இன்று காலை முதல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எரிபொருளை பெற்றுக்கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து வைக்கப்பட்டிருந்தமை காரணமாக கொழும்பு – ஹப்புத்தளை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் வாகன நெரிசல் காரணமாக, கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு […]