அவுஸ்திரேலிய இலங்கைக்கு பணம் அனுப்பும் சேவை கட்டணம் நீக்கம்

அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பும் போது அறவிடப்படும் 6 அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான சேவை கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை இந்த சலுகை வழங்கப்படவுள்ளது. நிலவும் பொருளாதார நெருக்கடியின் அழுத்தம் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கொமன்வெல்த் வங்கி அறிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com […]
எரிவாயு இறக்குமதிக்காக 90 மில்லியன் டொலர்

நாட்டுக்கு 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசாங்கத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். இதனூடாக எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இடைக்கால பாதீட்டில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் […]
சந்தையில் மேலும் சில பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் 160 கிராம் நிறைக் கொண்ட பற்பசையின் புதிய விலை 310 ரூபா […]
இலங்கைக்கு எதிராக ஹமில்டன் வங்கியினால் வழக்கு தாக்கல்

அடுத்த மாதம் 25 ஆம் திகதி முதிர்ச்சியடையும் பிணை முறிகளுக்கான கொடுப்பனவை செலுத்த தவறுகின்றமை தொடர்பில் பிணை முறிக்கு உரித்துடைய தரப்பு நிவ்யோர்க் பிராந்திய நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு வெளிநாட்டு கடன்களை தற்காலிகமாக செலுத்த முடியாது என மத்திய வங்கி அறிவித்திருந்து. இதற்கு எதிராக இலங்கையின் 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை முறிகளை கொண்டுள்ள ஹமில்டன் வங்கியினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த பிணை முறிகளின் 5.875 சதவீதத்தை […]
அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

அடுத்தவாரம் அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்ககை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இந்த குழு ரஷ்யா தொடர்பாக கலந்துரையாடாமல், இலங்கை தொடர்பாக மட்டுமே கலந்துரையாடும். இவ்வாறு இலங்கைக்கு பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு அப்பால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. வீழ்ச்சியடையும் வேகத்தை கட்டுப்படுத்தி […]
வெறிச்சோடிக் கிடக்கும் சிகிரியா!

இலங்கைக்கு டொலர் வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் பிரதான தொழிலாக சுற்றுலா தொழில்துறை இருந்து வருகிறது. எனினும் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, மின் துண்டிப்பு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ஏனைய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய தொழில் துறைகளில் ஈடுபட்டிருந்த மக்கள் பெரும் நட்டத்தை எதிர் கொண்டுள்ளனர். குறிப்பாக சீகிரிய குன்று அமைந்துள்ள சுற்றுலாப் பகுதியில் தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் […]
நாட்டை கட்டியெழுப்புவது அத்தனை சுலபமல்ல, ரணில்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை விரைவில் தீர்க்க, அரசாங்கமொன்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளையும் உள்ளடக்கிய கூட்டுத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும். இதற்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்ப்பார்க்கிறோம். இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்து, குறைந்த விலையின் கீழ் […]