வடக்கு, கிழக்கில் கடலட்டை உற்பத்தி

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆழமற்ற கடற்பகுதிகளில் கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இயற்கை கடல்சார் சூழலில் பிடிக்கப்படும் கடலட்டைகளின் ஏற்றுமதியால், குறிப்பிடத்தக்களவு வௌிநாட்டு செலாவணியை ஈட்டமுடியும் என்பதற்கமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 5000 ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட காணிகளில் 100 ஏக்கர் வரையிலான கடலட்டை உற்பத்தி, ஏற்றுமதி கிராமங்களை உருவாக்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் […]
3.3 மில்லியன் குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு 5,000 ரூபா

பொருளாதார நெருக்கடியில் வாழும் தெரிவு செய்யப்பட்ட 33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கான நிதியை உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் வழங்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன தெரிவித்தார். இந்த கொடுப்பனவு 6 மாதங்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com […]
வெளிநாட்டில் இருந்து வந்த பொதியில்13 கோடி ரூபாய் போதை மாத்திரைகள்

கொழும்பு – மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் நெதர்லாந்திலிருந்து கிடைக்கபெற்ற பொதியொன்றிலிருந்து பெருந்தொகையான போதைமாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. மேற்படி பொதியை பெற்றுக்கொள்வதற்கு எவரும் வந்திராத காரணத்தினால் அது இன்றைய தினம் தபால் திணைக்கள ஊழியர்கள், இலங்கை சுங்க போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரின் முன்னிலையில் சோதனையிடப்பட்டது. அதன்போது, அப்பொதியில் படுக்கை விரிப்புகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டிருந்தன. குறித்த பொதியிலிருந்து 13,640 மெதம்பிடமைன் அல்லது எக்ஸ்டசி எனப்படும் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன. […]
நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் மண்ணெண்ணெய்

யுத்த காலத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டிருந்தாக கூறப்படும் 715 லீற்றர் மண்ணெண்ணையை முல்லைத்தீவு பாதுகாப்புப் படையினர் நேற்று (20) கைப்பற்றியுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டுவதற்கு நிலத்தை தோண்டுவதற்காகச் சென்ற போது நிலத்தடியில் பிளாஸ்டிக் கேன் ஒன்று காணப்பட்டதையடுத்து ,புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதனையடுத்து, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், மண்ணெண்ணெய் வைக்கப்பட்டிருந்த இடத்தை […]
காலாவதியாகும் டின் மீன், திகதி, விலை மாற்றி சந்தைக்கு வினியோகிக்கும்

காலாவதியாக இருக்கும் டின் மீன்களின் உற்பத்தித் திகதி மற்றும் விலை என்பவற்றை மாற்றி சந்தைக்கு வினியோகிக்கும் தொழிற்சாலை ஒன்றில் காணப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிக்கத்தக்க டின் மீன்கள் நேற்று (20) மாலை கைப்பற்றப்பட்டதாக குருநாகல் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. பன்னல மூக்கலான பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது விசாரணைகளில் இருந்து மோசடி கணடறியப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 […]
நாணயப் பரிவர்த்தனைகள் கண்காணிப்புக்கான புதிய முறைமை அறிமுகம்

விரிவான எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகள் கண்காணிப்பு முறைமையை செயற்படுத்த புதிய தரவு சேகரிப்பு முறையை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளின் பங்கேற்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. புள்ளிவிபரவியல் மற்றும் ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக மதிப்புமிக்க உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் பல அம்சங்களில் கொள்கை உருவாக்கத்திற்கு இது உதவும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 […]
மசகு எண்ணெய் விலை கணிசமான அளவு குறைவு

கடந்த வாரம் உலக சந்தையில் 120 அமெரிக்க டொலரை கடந்திருந்த மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, தற்போது ஓரளவு குறைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. நேற்றைய தினம் மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 115 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது. வார இறுதியில் 112 அமெரிக்க டொலராக காணப்பட்ட ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை மீண்டும் சிறிதளவு அதிகரித்திருக்கின்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]