வரிசையில் காத்திருப்பதால் கடுமையான மன அமுத்தம் ஏற்படுகிறது!

மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றமையால், கடுமையான மன அழுத்தத்தை ஏற்படும் என உளவியல் வைத்திய நிபுணர் ரூமி ரூபன் எச்சரித்துள்ளார். இந்த மன அழுத்தம் காரணமாக, உடல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரிசைகளில் காத்திருக்கும்போது, உள மற்றும் உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல மணி நேரங்களாக வரிசைகளில் காத்திருக்கும்போது, மன அழுத்தம் ஏற்படுகின்றது. மன அழுத்தம் ஏற்படும்போது, உடல் ரீதியான பாதிப்புகள் அதிகரிக்கின்றன. வரிசைகளில் காத்திருக்கும்போது, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்கள் […]
ஜூலை 6 வரை சமையல் எரிவாயு இல்லை

அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது. எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு கப்பல்களில் 7, 000 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டை வந்தடையவுள்ளது. அந்த கப்பல்களில் உள்ள எரிவாயு கிடைக்கும் வரை கையிருப்பில் குறைந்தளவேனும் எரிவாயு இல்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் […]
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 367 ரூபா 39 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 435 ரூபா 14 சதம். விற்பனை பெறுமதி 451 ரூபா 89 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபா 29 சதம் விற்பனை பெறுமதி 389 ரூபா 89 சதம் சுவிஸ் பிராங் […]
பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 5 சொகுசு வாகனங்கள்

பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 5 சொகுசு வாகனங்கள் சுங்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. இலங்கை சுங்கத்தின் ஒருகொடவத்தை பண்டகசாலையில் இவை மீட்கப்பட்டுள்ளன. வாகன உதிரிப்பாகங்கள் என்ற போர்வையில் குறித்த வாகனங்கள், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவுடி, பென்ஸ், பீ.எம்.டபிள்யூ மற்றும் ஃபியட் ஆகிய அதிசொகுசு ரக வாகனங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் […]
சோமாலியாவில் மூன்றரை இலட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம்

சோமாலியாவில் 5 வயதுக்கும் குறைந்த 1.5 மில்லியன் சிறார்களுக்கு மந்தபோசனை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறார்களில் மூன்று இலட்சத்து 56 ஆயிரம் பேர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் உயிரிழக்கக்கூடிய அபாயம் இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோமாலியாவில் கடந்த சில நாட்களாக மழையின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு […]
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீட்பு

சட்டவிரோதமாக இறக்குமதிசெய்யப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. வத்தளை சரக்கு களஞ்சியசாலையில் இரு கொள்கலன்களில் இருந்து குறித்த பொருட்கள் மீட்கபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இவற்றுள் 40 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,500 மதுபான போத்தல்கள், இயந்திர எண்ணெய், அழகுசாதன பொருட்கள், மஞ்சள் மற்றும் லைட்டர் போன்ற இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]
அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருளைப் பதுக்கிய வர்த்தகர் கைது

இந்துருவ, யாலேகம கட்டிடப் பொருள் நிறுவனத்தில் 1490 லீற்றர் டீசல் மற்றும் 176 லீற்றர் பெற்றோல் அனுமதிப்பத்திரம் இன்றி நடத்துனரால் களஞ்சிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருளை மறைத்து வைத்திருந்த வர்த்தகரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின் பிரகாரம் வர்த்தகரின் சேமிப்பு அறையை சோதனையிட்ட பொலிஸார் எரிபொருளைக் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் […]