எரிபொருளுக்காக வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு துண்டு சீட்டு

எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை முதல் துண்டு சீட்டை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்சமயம் இடம்பெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், எதிர்வரும் வாரத்தில் எரிபொருள் விலை மீண்டும் திருத்தம் செய்யப்படக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com […]
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 64,000 லீற்றருக்கும் அதிக எரிபொருட்கள் மீட்பு

நாட்டின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக எரிபொருள் பதுக்கல் தொடர்பில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சுமார் 64,000 லீற்றருக்கும் அதிக பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்க்கப்பட்டுள்ளதோடு , 600 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அத்தோடு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலுள்ள எரிபொருள் தாங்கிகளை திறந்து காண்பிக்குமாறு பொதுமக்களால் பொலிஸார் வலியுறுத்தப்படுவதாகவும் , அனைவரதும் பாதுகாப்பினைக் கருதி அவ்வாறான செயற்பாடுகளில் […]
சீனத் தூதுவரை சந்தித்து மஹிந்த

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சீனத் தூதுவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீனத் தூதுவருக்குமிடைியலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது. இலங்கையின் கடிமனமான இந்த கால கட்டத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக சீனாவுக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மக்கள் மிகவும் பொறுமையாக இருப்பதாகவும், அதற்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், இலங்கையின் நிலை மிக விரைவில் வழமைக்கு திரும்பும் எனவும் சீன […]
அமெரிக்க ஜனாதிபதி பைடனை சந்தித்தார் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர்

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார். இச் சந்திப்பு கடந்த 13 ஆம் திகதியன்று வெள்ளை மாளிகையில் இடம்பெற்றுள்ளது பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கைக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகின்றது. இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மஹிந்த சமரசிங்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எடுத்துக்கூறியுள்ளார். இதேவேளை, அமெரிக்காவின் திறைசேரியின் ஆசியாவுக்கான உதவி உப செயலாளர் ரொபேர்ட் கப்ரோத், தெற்கு […]
மசகு எண்ணெய் விலை கணிசமான அளவு உயர்வு

கடந்த சில நாட்களாக, உலக சந்தையில், சிறு அளவிலான வீழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்த மசகு எண்ணெய் விலை, நேற்றைய நாளில் மீளவும் அதிகரித்திருந்தது. இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது. நேற்று முன்தினம் அதன் விலை 106 டொலராக காணப்பட்டது. உலக சந்தையில், மசகு எண்ணெய் விலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அதிகரித்த போக்கை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் […]
கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் மேலும் உயர்வு

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல வர்த்தக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை சுமார் 30% வரை உயர்த்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் அட்டைகள் மீது விதிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி வீத எல்லையை கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி முதல் நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. இதனையடுத்து, கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் 18 சதவிகிதத்திலிருந்து 24 சதவிகிதமாக […]
10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி!

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் திறந்த கணக்கு முறையின் கீழ் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரிசி, மா, வெள்ளைச் சீனி, சிவப்புப் பருப்பு, பால்மா , பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, செத்தல் மிளகாய், நெத்தலிக் கருவாடு மற்றும் கடலைப் பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் ஜூலை 1 […]