அபாயகரமான கட்டத்தில் இலங்கையின் பொருளாதாரம்

புதிய மேலாளர்கள் போதுமான மனிதாபிமான உதவிகளை உருவாக்குவதற்கும் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் தவறினால் , நாடு குழப்பமாகவும் அராஜகமாகவும் மாறும். மக்களின் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. முல்லைத்தீவில் எரிபொருளைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் தமிழ்க் கூட்டத்தைக் கலைப்பதற்காக இராணுவத்தினர் வானத்தை நோக்கிச் சுட்டதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெற்கில் பொலிஸார் பொறுப்பேற்கும் போது வடக்கில் இராணுவம் ஏன்? ஏன் இந்தப் பாகுபாடு? நெருக்கடியை தவறாக சித்திரித்து அதை ஓர் இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு திரைக்குப் பின்னால் ஏதாவது தீய மற்றும் கொடூரமான […]
இலங்கை காதலியை தேடி வந்த இந்தியப் பெண் கைது!

இரண்டு வருடங்களுக்கு மேலாக சமூக வலைத்தளங்களில் உறவைப் பேணி வந்த இந்தியப் பெண்ணும் இலங்கைப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைப் பெண்ணை தமிழகத்திற்கு வருமாறு இந்தியப் பெண் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த பெண்ணால் கடவுச்சீட்டை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து இந்தியப் பெண் ஜூன் 20 ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து குறித்த பெண்ணின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். குறித்த இலங்கைப் […]
தற்காலிகமாக 70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படவுள்ளன

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் 70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 நாட்களுக்கு முன்னரே முற்பதிவு செய்த போதிலும், போதியளவு எரிபொருள் இன்னும் கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் W.S.S. பெர்னாண்டோ தெரிவித்தார். அமைச்சரின் கூற்றுக்கிணங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே எரிபொருள் கிடைக்கும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். சிறுதொகை எரிபொருளே விநியோகிக்கப்பட்டுள்ளதால், […]
பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிப்பு?

எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டண விலையை அதிகரிக்க வேண்டுமென,தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். நாளை (27) முதல் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய கட்டணமாக குறைந்தபட்ச விலை 35% முதல் 40% வரை அதிகரிக்கப்பட வேண்டும் என அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய திருத்தத்தின் மூலம் தற்போதைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 […]
அனைத்து உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு?

இன்று முதல் அமுலாகும் வகையில், உணவு பொதியொன்றின் விலை மற்றும் ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி 10 சதவீதத்தால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com ⏰ யாழில் […]
எரிபொருட்கள் விற்பனையின் இலாபம் – நட்டம் தொடர்பில் தகவல்

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து எரிபொருட்களின் விலையின் இலாபம் மற்றும் நட்டம் என்பன தொடர்பான தகவல்களை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார். தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய விலைக்கு அமைய ஒக்டென் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு 15 ரூபா 57 சதமும், ஒக்டென் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு 68 ரூபா 61 சதமும், இலாபம் கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒட்டோ டீசல் […]
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 470 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும். இதேவேளை ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 […]