ஜனாதிபதி – அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவுக்கு இடையில் கலந்துரையாடல்

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி செய்வதற்கான, மிகவும் செயற்திறன் வாய்ந்த வழிமுறைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் தூதுக்குழு நேற்று நாட்டை வந்தடைந்தது. இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று இடம்பெற்றிருந்த கலந்துரையாடலை தொடர்ந்து தற்பொழுது ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது நிதி நிர்வாகத்திற்கான தொழில்நுட்ப உதவியை வழங்க அமெரிக்கா இணக்கம் இலங்கையில் நிதி முகாமைத்துவத்திற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம் […]

காங்கேசன்துறையில் இருந்து பாண்டிச்சேரிக்கான சரக்கு கப்பல் – பாதுகாப்பு அமைச்சு அனுமதி

இந்தியாவின் பாண்டிச்சேரி – காங்கேசன்துறைக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் சரக்கு கப்பல் காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எரிபொருள், உரம், பால் மா மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் 300 மெட்ரிக் டன் சரக்குகள் கப்பலொன்றின் மூலம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், அவ்வாறான கப்பல் மூலம் காங்கேசன்துறை […]

கலன்களுக்கு எரிபொருள் விநியோகம்: புகைப்படம் எடுக்க முயன்ற நபர் மீது தாக்குதல்!

கம்புறுபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில், புகைப்படம் எடுக்கச் சென்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டு, அவரது கைப்பேசியும் அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர் நபர் விமான நிலையத்தில் பணியாற்றிவரும் ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்புறுப்பிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் உள்ள பிரதேசமொன்றில், கம்புறுப்பிட்டிய கிராமிய வங்கியின் ஊழியர்களுக்கு மட்டும் 10 லீற்றர் எரிபொருள் கலன்களில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை புகைப்படம் எடுக்கச் சென்ற போதே அவர் மீது நேற்று (26) தாக்குதல் […]

குடும்பங்களுக்கு மின் கட்டண மானியம்

குறைந்த வருமானம் பெறும் மக்கள் மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு மானியத் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, இலங்கை மின்சார சபையின் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை மற்றும் மேலதிக விபரங்கள் நாளை வெளியிடப்படும் என தெரிவித்தார். புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 […]

எரிபொருள் இன்மையால் நாடு சுயமாக முடங்கும் நிலையில்!

தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் ஒக்டென் 95 வகை பெற்றோல், 3,000 மெட்ரிக் தொன் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வெளியிடப்பட்டாலும், அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே அது போதுமானது இருக்குமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தார். இது தவிர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் மற்றும் 92 ஒக்டேன் பெற்றோல் இருப்புக்கள் இல்லை எனவும் […]

வரிசையில் காத்திருப்போருக்கு வயிறார உணவளித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்!

எரிபொருள் பெளசர் வரும் வரை வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் வயிறு நிறைய உணவு வழங்கி உபசரித்த கொழும்பின் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

இலங்கை சந்தையில் சகிக்க முடியாத துர்நாற்றம்!

பேலியகொட சந்தையில் பழங்களின் இனிமையான நறுமணத்திற்கு பதிலாக அருவருப்பான துர்நாற்றம் வீசுகிறது, ஏனெனில் சந்தை வளாகத்தில் தொன் கணக்கில் கழிவுகள் குவிந்துள்ளதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். முக்கியமாக குப்பையில் இருந்து உருவாகும் தாங்க முடியாத துர்நாற்றம் காரணமாக வாடிக்கையாளர்கள் குறைவடைந்துள்ளதாக பழ விற்பனையாளர்கள் தெரிவிகின்றனர் . குப்பைகளை அகற்றுவதில் ஏற்றப்பட்டுள்ள தாமதம் இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது இங்கு தினமும் சுமார் 10-20 தொன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன . எனினும் எரிபொருள் நெருக்கடி காரணமாக குறித்த […]