எரிபொருள்: 100% தேவையை பூர்த்தி செய்ய முடியாது

வாகன இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இன்று முதல் வாகன உரிமையாளர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இருப்பினும் , எரிபொருளை கொண்டுவருவதில் ஏற்பட்ட தாமதத்தினால் இந்நடவடிக்கை உரிய தினத்தில் மேற்கொள்ள முடியாமற்போனதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதுதொடர்பாக 25 மாவட்டங்களின் செயலாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று கலந்துரையாடப்பட்டது. இதன் போது ஒவ்வொரு […]
இலங்கையில் எந்தவொரு தொழிலையும் செய்யாதோர் எண்ணிக்கை அதிகம்

நாட்டில் குறைந்தபட்சமாக வேலைத் தேடுபவர்களை விட எந்தவொரு தொழிலையும் செய்யாதோர் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 2021ஆம் ஆண்டிற்கான நாட்டின் வேலைப்படை தரவுளின் படி, நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் உள்ள மக்கள் தொகை சுமார் 8.55 மில்லியன் ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் செயற்பாட்டில் அல்லாதோர் சுமார் 8.58 மில்லியனாகவும் காணப்படுகிறது. இதேவேளை, 73 சதவீதமானேர் பெண்களாக உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் […]
உரத்தை விநியோகிப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

எதிர்வரும் 7ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை விவசாயிகளுக்கு உரத்தை விநியோகிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது இதற்காக, விவசாய அமைச்சின் கீழ் செயற்படும் அனைத்து நிறுவனங்களையும் சேர்ந்த ஊழியர்களின் விடுமுறைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் டன் யூரியா உரம் எதிர்வரும் 6ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கவுள்ளது. அதனை எதிர்வரும் 7ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இதனைக் […]
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 லீற்றர் டீசல் மீட்பு

கொட்டகலை – கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள – பத்தன காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவ்வாறு டீசல் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபரை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு […]
எரிபொருளை சேமித்து வைத்திருந்த ஐவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து அதிக விலைக்கு விற்பனை செய்த நான்கு சந்தேக நபர்களை மாவத்தகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாவத்தகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பஹதெனிய, மஸ்வெவ, வேஉட, வெலிகும்புர ஆகிய பகுதிகளிலேயே அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 315 லீற்றர் டீசல் மற்றும் 20 லீற்றர் பெற்றோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் 36 மற்றும் 59 வயதுடைய அம்பகொட்டே, பிலஸ்ஸ, கலஹா மற்றும் மாவத்தகம […]
இலங்கையில் டொலரிலேயே மின்கட்டணம் செலுத்த வாய்ப்பு

தமது வருமானத்தில் 60% க்கும் அதிகமான பங்கு அந்நியச் செலாவணி ஈட்டும் தனியார் அல்லது அரச நிறுவனங்கள், எதிர்காலத்தில் மாதாந்த மின்சார கட்டணத்தை டொலரில் செலுத்தும் முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை மின்சார […]
எரிபொருளுக்கான துண்டுச்சீட்டு விநியோகம்

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக துண்டுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். இன்றைய தினம் முதல் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு துண்டுச்சீட்டை விநியோகிக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்தார். எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்கின்ற போதிலும் இதுவரை துண்டுச்சீட்டு விநியோகம் இடம்பெறவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேவேளை எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் […]