நெல் தொகையை பயன்படுத்தி சந்தைக்கு அரிசி விநியோகம்

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் தொகையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடு நேற்று இடம்பெற்றது. உச்சபட்ச விலைக்கு அமைய அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்த அரிசி தொகையை சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய […]
பெற்றோலிய உற்பத்தி நாடுகள் இலங்கையில் எரிபொருள் இறக்குமதி

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த எரிபொருள் தேவையில் 90 சதவீதத்தினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பூர்த்திசெய்வதுடன், மிகுதி 10 சதவீதத்தினை லங்கா ஐஓசி நிறுவனம் ஈடுசெய்கிறது. தற்போது, நாடு எதிர்நோக்கியுள்ளது அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக தொடர்ச்சியாக எரிபொருள் தேவையினை பூர்த்திசெய்வது சவாலுக்குரிய செயற்பாடாகியுள்ளது. […]
எரிபொருளை வழங்கும் புதிய விநியோகஸ்தர்களை அடையாளம் காண தீர்மானம்

ஜெட் ஏ–1 விமானங்களுக்கான எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதற்காக புதிய விநியோகஸ்தர்களை அடையாளம் காண்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் விமான சேவைகளின் தொழிற்பாடுகளுக்காக நாளாந்தம் 1.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் தேவைப்படுகிறது. நாட்டில் தற்போதைய நிலைமையின் கீழ் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானக் நிறுவனங்களின் தொழிற்பாடுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்குத் தேவையான குறைந்தபட்ச எரிபொருள் அளவைக் கூட விநியோகிப்பதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் விமான சேவை தொழிற்பாடுகள் முடக்கப்படாமல் […]
சட்டவிரோத எரிபொருள் விற்பனைகள் அதிகரிப்பு!

இன்று முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை அடுத்து சட்டவிரோத முறையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தெரியவந்துள்ளது. இதற்கமைய சில இடங்களில் ஒரு போத்தல் பெற்றோல் 1,000 ரூபா முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் வரிசையில் காத்திருப்பவர்களை இலக்கு வைத்து இந்த வர்த்தகம் இடம்பெறுகிறது. இதேவேளை, பசறை, சப்புகஸ்கந்த மற்றும் எதிமலை ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 1,740 லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் […]
யாழ் சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாட்டை ஆரம்பிக்க அனுமதி

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகளை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள படிமுறைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு வெளியிட்டுள்ளது. அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் கொவிட் 19 தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தென்னிந்திய விமான நிலையம் வரை வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் […]
வீட்டு மின்சார உபயோ கட்டண திருத்தம் – 1 முதல் 30 அலகுக்கு 430 ரூபாவை

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுகளுக்கு, பதிலளிக்கும், வகையில் குறித்த கட்டணங்கள் திருத்தப்பட்டு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 1 முதல் 30 அலகு வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணமான 30 ரூபாவை, 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாவை முன்மொழிந்திருந்தது. மேலும், தற்போது 1 […]
ரூ.150 பில்லியன் பாரிய பிணைமுறி ஏலத்துக்கு மத்திய வங்கி அழைப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று உயர் பெறுமதியான பிணைமுறி ஏலத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 150 பில்லியன் ரூபா பெறுமதியான பாரிய பிணைமுறி வெளியீட்டுக்கு இன்று விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.