இலங்கையில் இன்று புனர்வாழ்வு மையத்தில் இருந்து 500க்கு மேற்பட்டோர் தப்பியோட்டம்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், அங்கிருந்து 500க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தப்பி ஓடியவர்களை தேடி, காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக […]

இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி

2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் தேசிய கணக்குகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பான முதலாம் காலாண்டுக்கான அறிக்கை அந்த திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 1.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் 4 நேர் சதவீதமாக காணப்பட்ட பொருளதார வளர்ச்சி வீதம், இந்த ஆண்டின் முதல் […]

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டோக்கன் பெற்ற போதிலும், மறு அறிவித்தல் வரும் வரை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார். மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் இருப்பு கிடைத்தவுடன், டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு அதன் இருப்பு குறித்து தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு […]

டோக்கன் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிய இராணுவத்தினர்!

இராப்பகலாக காத்திருந்து பெற்றுக்கொண்ட பெற்றோலுக்கான டோக்கன் கூட பயனற்று போவதாக மக்கள் அங்கலாய்கின்றனர். 15 நாட்களாக பெற்றோல் வழங்கப்படாமை காரணமாக கவலை அடைந்துள்ள ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் கடந்த 5 தினங்களாக தொடர்ச்சியாக இராப்பகலாக வீதி ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி காத்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் இராணுவத்தினரின் உதவியுடன் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் இணைந்து டோக்கன் வழங்க ஆரம்பித்தனர். காலை 9 மணியளவில் ஆரம்பித்த டோக்கன் வழங்கும் பணி இரவு 09 மணிவரை தொடர்ந்தது. ஆனாலும் […]

பஸ் கட்டணங்கள் 30 வீதம் உயர்வு

ஜூலை 1 முதல் பஸ் கட்டணங்கள் 30 வீதம் உயர்வு. ஆரம்பக் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டும் என பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள், போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினர். எனினும் இந்த கலந்துரையாடலின் போது இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு […]

இனிப்பு பண்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு

தற்போது ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக இனிப்பு பண்ட உற்பத்தியாளர்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உற்பத்தி நடவடிக்கைகள் 30 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக இனிப்பு பண்ட உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். 150 முதல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த உற்பத்தி தொழில் கடந்த 2 வருடங்களாக, உற்பத்திக்கான மூல பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர, மாற்று செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும், வெளிநாட்டு இறக்குமதியாளர்களுக்கு உற்பத்தி […]

இலங்கைக்கு புதிய கப்பலை அனுப்பமுடியாது – சீன

நிராகரிக்கப்பட்ட சீன பசளை கப்பலுக்கு பதிலாக புதிய கப்பல் ஒன்றை வழங்க முடியாது என அதிகாரிகளுக்கு குறித்த சீன நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சீன நிறுவனம் சார்பில் நாட்டின் முகவர் நிறுவனம் கடந்ததினம் விவசாய அமைச்சில் அதிகாரிகள் சிலருடன் நடத்திய சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியானது. சீன பசளை நிறுவனம் அவ்வாறான அறிவிப்பை வெளியிட்டாலும் அவர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல் நடத்தி வருவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முடிந்தால் நிராகரிக்கப்பட்ட சேதன பசளைக்கு பதிலாக […]