ஜூலை 22 ஆம் திகதி வரை பெற்றோல் இல்லை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஜூலை 22 ஆம் திகதி வரை பெற்றோல் இறக்குமதி செய்ய முடியாது. டீசல் இறக்குமதி ஜூலை 11 முதல் 15 வரை எதிர்பார்க்கப்படுகிறது; அதுவரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் டீசல் கையிருப்பு – பிரதமர் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் […]
ஒரு நாள் பாஸ்போர்ட் சேவை மூன்று மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

ஒரு நாளில் கடவுச் சீட்டு பெறும் சேவைகள் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வவுனியா, கண்டி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கடவுச் சீட்டுகளை ஒரு நாள் சேவையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்று முதலில் நடைமுறைபடுத்தும் திட்டமாக இது கருதப்படுகிறது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், […]
உணவுப் பயிர் உற்பத்திகள் தேசிய புரட்சி திட்டம்

‘ஒன்றுபட்டு பயிரிடுவோம் – நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ – உணவுப் பயிர் உற்பத்திகள் தேசிய புரட்சி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த வேலைத்திட்டம் விவசாயத் திணைக்களம் மற்றும் மாகாண விவசாய திணைக்களங்களின் தொழிநுட்ப ஒத்துழைப்பின் கீழ் விவசாய அமைச்சின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களுக்கு சொந்தமாகவுள்ளதும் பயிரிடக் கூடியதுமான 250,000 ஹெக்டேயர் காணிகளை பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்தி, குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், […]
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 6 சதம் விற்பனை பெறுமதி 367 ரூபா 22 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 435 ரூபா 4 சதம். விற்பனை பெறுமதி 452 ரூபா 19 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374 ரூபா 97 சதம் விற்பனை பெறுமதி 389 ரூபா 87 சதம் சுவிஸ் பிராங் […]
இதுவரை சுற்றிவளைப்புகளில் 75,000 லீற்றருக்கும் அதிக எரிபொருள் மீட்பு

எரிபொருளை மறைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புகளின் போது இதுவரை 23,728 லீற்றர் பெற்றோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 41,382 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, 11,876 லீற்றர் மண்ணெண்ணெய்யையும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 768 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் […]
இந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்களை நாட்டுக்கு கொண்டுவர தீர்மானம்

கட்டணம் செலுத்தல் முறைமையின் கீழ் இந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்களை நாட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தலா 40, 000 டன் எரிபொருள் அடங்கிய 4 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தலைமையிலான தூதுக்குழுவினர் இந்திய பெற்றோலிய வளத்துறை அமைச்சருடன் சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பின் பயனாக, கட்டணம் செலுத்தல் அடிப்படையில் எரிபொருளை நாட்டுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் […]
சீன வழங்கிய 5,000 மெட்ரிக் டன் அரிசி இலங்கையிடம் கையளிப்பு

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் டன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. 44 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட 5,000 மெட்ரிக் டன் அரிசி, சீனத் தூதரகப் பிரதிநிதிகளால் இலங்கையின் பதில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. சீன மக்களால் இலங்கை மாணவர்களுக்கு 10, 000 மெட்ரிக் டன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை உணவு திட்டத்துக்கு உதவியளிக்கும் வகையில் 7,900 பாடசாலைகளுக்காக, எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படுமென […]