லங்கா ஐஓசி எரிபொருள் விநியோகிக்கும் சகல தாங்கி ஊர்திகளுக்கும் அழைப்பு!

லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருளை விநியோகிக்கும் சகல தாங்கி ஊர்திகளையும் இன்றைய தினம் சேவைக்கு அழைத்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்றைய தினம் எரிபொருளை விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அந்த நாட்டின் வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் செயிக் மொஹமட் பின் ஹமாட்டை சந்தித்துள்ளார். இதன்போது, இலங்கையின் எரிசக்திதுறை மற்றும் மேலும் சில துறைகளில் […]

அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியீடு!

சகல இறுதி உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கும் பொதி உறை அல்லது கொள்கலன் மீது அதன் அதிகபட்ச சில்லறை விலை உள்ளிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என அறியப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் தவிசாளர் சாந்த நிரிஎல்லவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சகல பொருட்களினதும் பொதிகளுக்கு வெளியே, அதிகபட்ச சில்லறை விலைக்கு மேலதிகமாக, நிறை அல்லது தொகை, உற்பத்தி செய்த திகதி, காலாவதி திகதி, குறியீட்டு இலக்கம், உற்பத்தியாளரின் பெயர், பதிவு […]

1,900 லீற்றர் டீசல் பதுக்கி வைத்திருந்த நபர் கைது!

விசேட அதிரடிப்படையின் அரந்தலாவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அனுமதிப் பத்திரமின்றி எரிபொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (29) கிராந்துருகோட்டையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்போது 1,900 லீற்றர் டீசல் மற்றும் 19 லீற்றர் பெற்றோலை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த எரிபொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 900,000 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவராவார். சந்தேகநபர் கிராந்துருகோட்டை […]

மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நந்தலால் வீரசிங்க

கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் புதிய தவணைக்கான ஆளுநராக இன்று (30) காலை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் தயா ரத்நாயக்கவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com […]

இலங்கையில் வதிவிட கால விசா நீடிப்பு!

இலங்கையர் அல்லாதவர்கள், இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருட வதிவிட விசா காலம் நீடிக்கப்படவுள்ளது. அதற்கமைய 5 வருடங்களுக்கு அதனை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த […]

நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 22% இனால் உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஆகக்குறைந்து பேருந்து கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய கட்டணங்கள் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேருந்து தொழிற்சங்கங்கள் கோரிய, 40 ரூபா ஆகக்குறைந்த கட்டணம் மற்றும் 30 சதவீத பேருந்து கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று (29) சமர்ப்பித்திருந்தது. […]

உணவு பாதுகாப்புக் குழு

உணவு பாதுகாப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. அரச உணவு உற்பத்தி நிறுவன அதிகாரி ஒருவர் இந்த குழுவிற்கு நியமிக்கப்படவுள்ளார். இந்த குழு தொடர்புடைய நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்து, சந்தையில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு குறித்து மீளாய்வு செய்யவுள்ளது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் […]