ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்முதல் செய்துள்ள லிட்ரோ நிறுவனம்

நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம், 100,000 மெட்ரிக் தொன் எல்பி எரிவாயுவை வெற்றிகரமாக கொள்முதல் செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த மொத்த எரிவாயுவிற்கு 90 மில்லியன் செலவாகவுள்ள நிலையில், அதில் 70 மில்லியன் டொலரை உலக வங்கி நிதியுதவியாக வழங்கவுள்ளதோடு, மீதமுள்ள 20 மில்லியன் டொலரை லிட்ரோ நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இந்நிலையில் குறித்த எரிவாயு நான்கு மாதங்களுக்கு நாட்டிற்கு வழங்க போதுமானதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டள்ள நிலையில், […]
எச்சரிக்கை! மசகு எண்ணெய் விலை 200 டொலரைத் தாண்டும்

ரஷ்ய எண்ணெய்க்கு விலை வரம்புகளை விதிக்கும் வகையில் ஜி7 நாடுகள் செயற்பட்டால் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 200 டொலரைத் தாண்டும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்ய எண்ணெய் மீது விலை வரம்புகளை விதிக்கும் யோசனையை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது. உலகச் சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 115.7 டொலராகவும், அமெரிக்க டபிள்யூ டி ஐ எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109.81 டொலராகவும் […]
காலியாகும் கடைகள்; பொருட்கள் இன்றி திண்டாட்டம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முடங்கியுள்ள நிலையில், மக்கள் குறிப்பாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் அலமாரிகள் வார இறுதியிலிருந்து பெருமளவு காலியாகி விட்டன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தமக்கு உரிய நேரத்தில் பொருட்கள் கிடைப்பதில்லை என முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நேற்றிலிருந்து அரசாங்கம் எரிபொருள் விநியோகத்தை மேலும் மட்டுப்படுத்தியதால், […]
இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல்

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான முறையான பொறிமுறை இல்லாததே இந்த பிரச்சினைக்கு பிரதான காரணம் என அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட […]
வெளிநாட்டு பயணிகள் வருகையில் வீழ்ச்சி; வியாபாரிகள் கடும் பாதிப்பு!

எரிபொருள் இன்மையால் திருக்கோணேச்சரம் ஆலய வெளிப்பகுதி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேச்சரம் ஆலயத்திற்கு அதிகளவான மக்கள் சென்று வழிபடுவதுடன், சுற்றுலா பிரயாணிகளும் அங்கு அதிகளவில் சென்று வருகின்றமையானது வழக்கமானது. இந்த நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் செல்வது மிகக்குறைவாக காணப்படுகின்றது. இதனால் கோவில் வணக்க பகுதிக்கு வெளியே காணப்படும் வர்த்தக நிலையங்கள் பல பூட்டப்பட்டு காணப்படுகின்றன. வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் பலர் அனுராதபுரம் உள்ளிட்ட […]
இலங்கையின் ஏற்றுமதி 5 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பு

இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (நுனுடீ) தெரிவித்துள்ளது. இலங்கை சுங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2022 மே மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியின் வருமானம் 980.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (9.9%)அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக ஆடை கைத்தொழில்,பலசரக்கு பொருட்கள், தென்னை சார்ந்த உற்பத்திகள்,அலங்கார மீன் மற்றும் மின்சார உபகரணங்களின் ஏற்றுமதி அதிகரித்து ஏற்றுமதி வருமானமும் அதிகரித்துள்ளது. இந்த பொருட்களில் அதிக […]
24 நாட்களின் பின்னரே பெற்றோல் கப்பல் – ரணில்

எதிர்வரும் 24 நாட்களின் பின்னரே பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலே டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் கூறினார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 11,000 மெட்ரிக் டன் டீசலே கையிருப்பில் உள்ளது. அத்துடன் 5,000 மெட்ரிக் டன்னுக்கும் […]