பணவீக்கம் 54.6 சதவீதமாக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் ஜீன் மாத பணவீக்கம் 54.6 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உணவு பணவீக்கம், 80.1 சதவீதமாகவும், உணவல்லா பணவீக்கம் 42.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து துறை பணவீக்கம் 128 சதவீதமாகவும், ஆடைகள் மற்றும் பாதணிகளுடன் தொடர்புடைய பணவீக்கம், 44.4 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட […]

துவிச்சக்கரவண்டியின் விலை 50,000 ரூபாவை கடந்தது

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள மக்கள் துவிச்சக்கர வண்டிகளையும், அதன் உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்யும் போக்கு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துவிச்சகர வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள துவிச்சக்கரவண்டி விற்பனை நிலையங்களை மக்கள் அதிகளில் நாடுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் துவிச்சக்கர வண்டிகளைக் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ள சூழ்நிலையில், அதன் விலையும் அதிகரித்துள்ளது. தற்போதுவரை சாதாரண துவிச்சக்கரவண்டி ஒன்றின் விலை, 50 ஆயிரம் ரூபாவைக் கடந்துள்ளதாக விற்பனையாளர்கள் […]

எரிவாயு வழங்கலை விரைவுபடுத்த நடவடிக்கை

நுகர்வோருக்கு எரிவாயு கொள்கலன்களை விரைவாக வழங்குவதற்காக அதன் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது முனையங்களில் மீள் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநியோக முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் இந்த மீள் நிரப்பப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் அதிகளவில் தினசரி விநியோகிக்கவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மோசடியான வர்த்தகர்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக எரிவாயுவை விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான […]

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 5 வருட விசா

இலங்கையிலுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒரு வருட விசா செல்லுபடியாகும் காலத்தை ஐந்து வருடங்களாக நீடிப்பதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தலைமையில் இன்று இலங்கை முதலீட்டுச் சபையில் இடம்பெற்றது. இதன்போது, விசா தொடர்பான முதலாவது சான்றிதழ் லங்கா ஐஓசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தாவுக்கு வழங்கி வைக்கப்பட்டது. புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 […]

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட(30.06.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com 🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

யாழ் மாநகர சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

எரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றையும் யாழ் மாநகர சபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன் விடுத்துள்ளார். திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது மக்களை பாதிக்கின்ற அளவிற்கு யாழ்ப்பாண மாநகர சபையினுடைய செயற்பாடுகளையும் பாதித்திருக்கின்றது. இதனால யாழ் மாநகரசபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு […]

திகதிகள் உள்ளிட்ட சகல விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யத் தடை

விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலை, எடை, அளவு, உற்பத்தி திகதி, காலவதியாகும் திகதி, உற்பத்தியாளரின் பெயர், முகவரி உட்பட சகல விபரங்களும் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கும் […]