எரிபொருள் நெருக்கடி, பிரதமர் தலைமையில் ஆராய்வு

எரிபொருள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால், இதன்போது பிரதமருக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களில், 90 சதவீதமானவை தற்போது மூடப்பட்டுள்ளன. கையிருப்பில் உள்ள எரிபொருளை, அத்தியாவசிய சேவைகளுக்கு விநியோகிப்பதற்காக, எஞ்சியுள்ள 10 சதவீத நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், […]
நான்கு கோடி ரூபாய் தங்கத்துடன் வந்த இலங்கையர் கைது

நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கப்பாளங்களுடன் டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை டுபாயிலிருந்து விமானம் மூலம் நாட்டை வந்த குறித்த நபரிடமிருந்து 16 தங்கப் பாளங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 4 கோடியே 72 இலட்சத்து 11 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு – தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 35 வயதான குறித்த சந்தேகநபருக்கு 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சுங்க […]
3 எரிபொருள் கப்பல்களின் வருகை குறித்து ஐஓசியின் அறிவிப்பு

பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய 3 கப்பல்கள் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரின் கூற்றுப்படி, ஜூலை 13 மற்றும் 15 க்கு இடையில் ஒரு கப்பல் இலங்கையை வந்தடைய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மற்றுமொரு எரிபொருள் கப்பல் ஜூலை 29 – 31 ஆம் திகதிகளுக்கு இடையிலும் மூன்றாவது எரிபொருள் கப்பல் ஓகஸ்ட் 10 – 15 க்கு இடையிலும் நாட்டை வந்தடைவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. புலத்தையும் நிலத்தையும் […]
இலங்கை வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 367 ரூபா 24 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 79 சதம். விற்பனை பெறுமதி 447 ரூபா 6 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 52 சதம் விற்பனை பெறுமதி 385 ரூபா 40 சதம் சுவிஸ் பிராங் […]
கள்ளச் சந்தையில் 2500 ரூபாய்க்கு பெற்றோல்

வவுனியாவில் கள்ளச் சந்தையில் 2500 ரூபாய்க்கு பெற்றோல் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வவுனியாவில் எரிபொருள் விநியோகம் முறையான கட்டமைப்பின் கீழ் இல்லாமையால் எரிபொருள் மாபியாக்கள் பெற்றோலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக பெற்று அதனை 2500 ரூபாய் தொடக்கம் 3000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். எரிபொருள் விற்பனை மாபியாக்களின் செயற்பாடு காரணமாக எரிபொருள் அவசியமானவர்கள் கூட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சீராக சென்று பெற்றோலை பெற முடியவில்லை எனவும், கள்ளச் […]
கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு விலைகள் அதிகரிப்பு

கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன. தென்மாகாணத்தில் ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை மூவாயிரத்து 900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் விசேட வகை கறுவா ஐயாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் செய்கையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் மிளகு ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் ஏலக்காய் 2 ஆயிரத்து 300 ரூபா முதல் 2 ஆயிரத்து 400 […]
லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு?

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 200 ரூபா அளவில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்கமைய, சிலிண்டர் ஒன்றின் விலையை 5,100 ரூபா அல்லது அதனை அண்மித்த தொகையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். லிட்ரோ 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய […]