பணவீக்கம் 80.1 சதவீதமாக அதிகரிப்பு!

கடந்த ஜூன் மாதம் உணவுப் பொருட்களின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் பணவீக்கம் 80.1 சதவீதத்துக்கு அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதம் 57.4 சதவீதமாக காணப்பட்டதாக மத்திய வங்கியின் தரவுகள் குறிப்பிடுகின்றன. மீன், காய்கறிகள், பாண், அரிசி மற்றும் பால்மா என்பவற்றின் விலைகள் கடந்த மாதகாலப்பகுதியில் கணிசமாக அதிகரித்துள்ளன. அத்துடன் குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து, உணவகம், விடுதிகள், வீடமைப்பு, நீர், மின்வலு மற்றும் எரிவாயு உள்ளிட்ட வகைகளில் […]
ஏற்றுமதி நடவடிக்கைகள் 9.9 சதவீதமாக அதிகரிப்பு

ஏற்றுமதி நடவடிக்கைகள் கடந்த மே மாதத்தில் 9.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கத்தினால் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. தைக்கப்பட்ட ஆடைகள், புடவை வகைகள், தெங்கு பொருள்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் போன்றவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, தேயிலை, வாசனை திரவியங்கள், இறப்பர் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், கடல் உணவுகள் போன்றவற்றின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க வகையில் மே மாதத்தில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இந்த வருட ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில், […]
இலங்கை முழுமையாக முடங்கும் அபாயம்

அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படாத போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு பூட்டப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ள நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்யும் வரை இந்த அபாய நிலை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முடக்க நிலை பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி, சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி […]
கிளிநொச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6,400 லீற்றர் டீசல் மீட்பு

கிளிநொச்சி – நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை எரிபொருள் காவல்துறையினால் மீட்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த தொகை எரிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 லீற்றர் பெற்றோல், 6,400 லீற்றர் டீசல் மற்றும் 25 லீற்றர் மண்ணெண்ணெய் அடங்கிய 35 பீப்பாய்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக […]
பணவீக்கம் 54.6 சதவீதத்தினைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)1 ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 மேயின் 39.1 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 54.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 மேயின் 57.4 சதவீதத்திலிருந்து 2022 யூனில் 80.1 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மேயின் […]
பத்து பைசாவிற்கு வீதியில் ஐஸ் விற்றவர் ஜிகே! இன்று?

1971ஆம் ஆண்டு முன்புவரை பத்து பைசாவிற்கு வீதியில் ஐஸ் விற்றவர் ஜிகே சந்திரமோகன் சொத்தை விற்று கடன் வாங்கி ரூ13ஆயிரத்தை திரட்டி 1971ஆம் ஆண்டு ஜிகே அண்ட் கோ நிறுவனத்தை உருவாக்கி அருன் ஐஸ்க்ரீம் என்னும் தயாரிப்பை தமிழகத்திற்கு கொடுத்தார் இன்று தமிழக பட்டித்தொட்டியிலும் இவருடைய தயாரிப்பான அருன் ஐஸ்க்ரீம் பிரபலமாகிவிட்டது இதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது ஐஸ்க்ரீமிற்கு மூலதனம் பால் கொள்முதல் பிறகு அந்த பாலையும் தொழிலாக செய்தார் 1995ஆம் ஆண்டு அரோக்யா பால் […]
ஒரு லீற்றர் பெற்றோல் 2000 ரூபாவுக்கு விற்பனை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குருநாகலில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் விலையை உயர்த்தி விற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சந்தை விலையை விட நான்கு மடங்கு அதிகரித்து எரிபொருளை அநியாயமாக விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை […]