மூன்று இடங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் திட்டம் ஆரம்பம்

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகளை மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒவ்வொரு பிராந்திய அலுவலகங்களிலும் முன்கூட்டியே பதிவு செய்த 100 பேருக்கு மாத்திரம் இந்தச் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து […]
மண் அடுப்புக்கான கேள்வி அதிகரிப்பு

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் மண் அடுப்புக்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது. அத்துடன், மிகக் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மண் அடுப்புகளின் விலைகள் தற்போது 850 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. முன்னதாக குறைந்தளவானோரே மண் அடுப்பை கொள்வனவு செய்ததாக உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்தனர். எனினும் தற்போது, அதிகளவான கேள்வி நிலவுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய […]
லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகம் மேலும் விஸ்தரிப்பு!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை மேலும் விஸ்தரித்துள்ளது. இதன்படி, நேற்றைய தினம் ஒருமில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில், நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் திருகோணமலை முனையத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கொழும்புக்கு தேவையான எரிபொருளை கனிய எண்ணெய் மொத்த களஞ்சிய முனையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர் டபிள்யு சொய்ஷாவினால் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு மேலதிக தாங்கி ஊர்திகள் அனுப்பி […]
19 கோடி பெறுமதியான தங்கம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது

19 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ததாக சுங்கப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து 8.5 கிலோகிராம் தங்கம், 75,000 அமெரிக்க டொலர் மற்றும் 19,000 யூரோ என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குறித்த இருவர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக […]
பால்மாவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு!

இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை அவசரத் தேவையாகக் கருதி, இலங்கையின் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், நாட்டுக்குத் தேவையான பால்மாவை பெருமளவு இறக்குமதி செய்வதற்கும் இந்தியா ஒத்துழைப்புத் தெரிவித்துள்ளது. உணவு பதப்படுத்துதல் மற்றும் பால் உற்பத்தி துறைகளில் அதிக ஒத்துழைப்பை வழங்குவதற்கான விடயங்களை ஆராய இந்திய ஆய்வுக் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும் இந்தியாவின் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய அமைச்சரின் பணிப்புரையின் கீழ், தற்போதுள்ள பால் […]
இந்திய விசா விண்ணப்ப ஏற்பு நாட்களில் மாற்றம்!

இன்று முதல் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இந்திய விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்திய விசா விண்ணப்பங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அவுட்சோர்ஸ் விசா விண்ணப்ப மையத்தின் (Outsourced Visa Application Centre) மூலம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் அறிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் […]
இலங்கையில் எரிபொருளை டொலர் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்

அமெரிக்க டொலர்களில் பணம் செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனமும் அல்லது தொழிற்சாலையும் தமக்கு வாராந்த தேவைக்கான எரிபொருளை டொலர் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்தினால் இதற்காக புதிய கணக்கு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com