நான் காலால் உதைந்தது உண்மை: அது அந்த நபர் மேல் படவேயில்லை கேர்ணல் விராஜ்

குருணாகல், யக்கஹபிட்டிய ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து, தான் நபர் ஒருவர் மீது காலால் உதைத்து தாக்கிய போதும், அது அந் நபரின் மேணியில் படவில்லை என குருணாகல் நகர பகுதியின் இராணுவ லெப்டினன் கேர்ணல் தர கட்டளை அதிகாரியான விராஜ் குமாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் மற்றும் சமூக வளைத்தளங்களில் பரவி வரும் வீடியோ காணொளி தொடர்பில் அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். தான் குருணாகல் பகுதியில் சேவையாற்றும் நற்பெயர் […]

ஜூன் மாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் நாட்டுக்கு 30,207 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். இந்த எண்ணிக்கை ஜூன் மாதம் 32, 865ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, முதல் அரையாண்டில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர். இதற்கமைய இந்தியாவிலிருந்து 6,650 பேரும், பிரித்தானியாவில் இருந்து […]

இந்த மாதம் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்படாலம்

இந்த மாதம் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்படாலம் என உறுதிப்படுத்தப்படாத புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி, காவல்துறைமா அதிபர் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கறுப்பு ஜூலை தினத்தை நினைவு கூறும் வகையில் இந்த மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சுட்டிக்காட்டி இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான தாக்குதல் ஒன்று நடத்தப்படுவதற்கான களநிலைமைகள் […]

இலங்கையின் கடன்நெருக்கடி ஆசிய நாடுகளிற்கு ஒரு எச்சரிக்கை – மஹாதீர்

இலங்கையின் தற்போதைய கடன்நெருக்கடியானது ஆசிய நாடுகளிற்கு ஒரு எச்சரிக்கை என தெரிவித்துள்ள முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகமட் நாணயத்தை மோசமாக நிர்வகித்ததும் மோசமான முதலீட்டுக்கொள்கையுமே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார் சர்வதேச நாணயநிதியத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்ர்வதேச ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடியானது ஆசிய நாடுகளிற்கான ஒரு எச்சரிக்கை. ஆசிய நாடுகள் பொறுப்புணர்வுள்ள நிதிக்கொள்கையை பின்பற்றவேண்டும் அல்லது மன்னிக்காத சர்வதேச நாணயநிதியத்தின் கரங்களில் சிக்கவேண்டியிருக்கும். கடன்வழங்கியவர்களிற்கு செலுத்துவதற்கான வலுவான […]

யாழ், கிளிநொச்சி இடையில் விசேட புகையிரத சேவை

யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான விசேட புகையிரத சேவை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அரச அலுவலகங்களில் பணியாற்றுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு சென்றுவரும் நூற்றுக்கணக்கான அலுவலர்களின் நன்மை கருதி இந்த சேவை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் அரச அலுவலர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் அறிவியல்நகர் வளாக விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்தச் சேவையை ஆரம்பிப்பதற்கான கோரிக்கை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் ஊடாக, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் […]

யூரியா பத்தாயிரம் ரூபாவிற்கு வழங்க நடவடிக்கை

இந்தியாவிடம் இருந்து கிடைக்கபெறும் யூரியா, மூட்டையொன்றின் விலையை பத்தாயிரம் ரூபாவிற்கு அடுத்த வாரம் முதல் சகல விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்சமயம் யூரியா மூட்டையொன்றின் விலை 42 ஆயிரம் என்ற அதிக விலையில் சந்தையில் விற்பனையாகிறது. இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் உரத்தை விவசாயப் பிரதிநிதிகளின் இணக்கத்துடன் பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இந்த விலையில் யூரியா மூட்டையை விற்பனை செய்யுமாறு விவசாயிகள் கடிதம் மூலம் […]

ஊழியர்களுடன் இணைந்து எரிபொருள் மோசடி; லீற்றர் 1200 ரூபா!

ஹற்றன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது இடம்பெற்று வரும் எரிபொருள் மாஃபியா காரணமாக இப்பிரதேசத்தில் வாகன உரிமையாளர்கள் பலர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகள் மற்றும் தனியார் பஸ் சாரதிகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணிபுரியும் ஒரு சிலருடன் இணைந்து இந்த மாஃபியாவை நடத்துவதாக பல வாகனச் சாரதிகள் தெரிவிக்கின்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு டீசல், பெற்றோல் கிடைக்கும் போது, ​​எரிபொருள் நிரப்பும் […]