எரிவாயு கப்பல் வருவதில் மேலும் தாமதம்!

இலங்கைக்கு நாளை (6) வரவிருந்த 3,700 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பல், மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி குறித்த கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது. இதற்கு மேலதிகமாக எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் 11 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம் உலக வங்கியுடன் 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் […]

துவிச்சக்கரவண்டிகளுக்கு பற்றாக்குறை

சந்தையில் துவிச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு இன்மையால் அதன் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் எவ்வாறாயினும், சில வர்த்தகர்கள் கையிருப்பில் உள்ள துவிச்சக்கர வண்டிகளை பல்வேறுப்பட்ட விலைகளில் விற்பனை செய்வதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதன்படி, சாதாரண துவிச்சக்கர வண்டி ஒன்று 65 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கியருடன் கூடிய துவிச்சக்கர வண்டி 77 […]

நெற்செய்கையாளர்கள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி!

நெற்பயிர்ச் செய்கையாளர்களால் பெறப்பட்டு, செலுத்தப்படாத விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இதன்படி இரண்டு ஹெக்டேயர் அல்லது அதற்கும் குறைவான காணியில் நெற்செய்கைக்காக அரச வங்கிகளில் பெறப்பட்ட ஆரம்ப கடன் தொகையை தள்ளுபடிசெய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஏப்ரல்21 தாக்குதலும் அதைத் தொடர்ந்து வந்த கொரோனா தொற்றும் பொதுவாக எல்லாத் துறைகளிலும் நேரடி […]

இளைஞனை தாக்கிய ராணுவ அதிகாரியின் பதவி பறிப்பு.

குருணாகல்- யக்கஹபிட்டிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, சம்பவத்துடன் தொடர்புடைய சிரேஷ்ட இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில், யக்கஹபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலைய சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணை ஆயத்தின் பரிந்துரைகள் கிடைக்கும் வரையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த அதிகாரி சகல கடமைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில், இராணுவத்தின் காவல்துறை பிரிவினரும் […]

ஒரு கிலோ அரிசியை 140 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும்!

ஒரு கிலோ கிராம் அரிசியை 140 ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பிருப்பதக முன்னாள் விவசாய பணிப்பாளர் கே.பீ. குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை என்பன உரிய தலையீடுகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அரிசியை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சமுர்த்தி நிவாரணத்தை பெறும் குடும்பங்களுக்கு குறைந்த விலையில் அரிசியை பெற்றுக் […]

‘என்னால் என் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாது’ BBC

வாசனை முதலில் உங்களைத் தாக்கும் – புதிதாக சமைத்த அரிசி, பருப்பு மற்றும் கீரை, வேகவைக்கும் பாத்திரங்களில் இருந்து லட்டுகளில் பரிமாறப்படுகிறது. டஜன் கணக்கான குடும்பங்கள் – குழந்தைகளுடன் தாய்மார்கள் உட்பட – அன்றைய தினம் அவர்களின் ஒரே உணவாக இருக்கும் உணவைப் பெற தட்டுகளுடன் வரிசையாக நிற்கிறார்கள். நான்கு பிள்ளைகளின் தாயான சந்திரிகா மானெல் கூறும்போது, ​​“நாங்கள் பசியால் இங்கு வந்துள்ளோம். தன் கைகளால் ஒரு உருண்டை அரிசியைப் பிசைந்து, பருப்பு மற்றும் கீரையுடன் கலந்து […]

வங்கி அட்டை ஊடாக பேருந்து கட்டணம் செலுத்தும் வசதி

எதிர்காலத்தில் வங்கி அட்டை ஊடாக பேருந்துகளுக்கு கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த எதிர்ப்பார்ப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அத்துடன், பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும்இ பஸ்ஸில் கட்டாயமாக கட்டண அட்டவணை காட்சிப்படுத்த வேண்டும். இது தொடர்பில் ஆராய்வதற்கு பயணச்சீட்டு பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும்இ போதிய பணியாளர்கள் இல்லாததால் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும்இ அவற்றைத் தவிர்க்க மேற்கண்ட தொலைபேசி இலக்கத்தைப் […]