சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இதற்கு அமைய நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்றிட்டத்தை வெற்றிகரமான முறையில் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. கடன் மறுசீரமைப்பு, நிலையான கடன் திட்டம் என்பன பற்றிய அறிக்கையும் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இரண்டு நிதி நிறுவனங்கள் இது தொடர்பான திட்டங்களை வரைந்து வருவதாகவும் […]

ரணில் பதவி விலக வேண்டும். தம்மிக்க பெரேரா

ரணில் விக்ரமசிங்க உடனடியாக நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அமைச்சரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டம் எதுவும் நிதியமைச்சர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவிடம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் உருவாகி வரும் நெருக்கடியின் சகல பகுதிகளும் டொலர் நெருக்கடியுடன் இணைந்திருப்பதால், நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத நிதியமைச்சர் நாட்டில் இருப்பது ஆபத்தான நிலை என தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். ரணில் […]

6 முதல் 8 வரை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

ஜூலை 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் 3 மணித்தியால மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்கள்: பகல் வேளையில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் CC வலயம்: காலை 6 மணி முதல் காலை 8.30 மணிக்குள் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள் MNOXYZ வலயங்கள்: காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணிக்குள் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு […]

பணவீக்கத்தில் சிம்பாப்வேவுக்கு அடுத்தபடியாக இலங்கை!

விரைவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். எனினும் ராஜாங்க அமைச்சர்களை கொண்டு எவ்வித பயன்களும் இல்லை என்று தயாசிறி குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம், இன்னும் முன்னோக்கி செல்லக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அனைத்துக்கட்சிகளையும் இணைந்து சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் போர்க்காலத்தில் ஒரு போத்தல் பெற்றோல் 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநிலை இன்று […]

மண்ணெண்ணெய் விலை கட்டாயம் அதிகரிக்கப்படும்

எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டியேற்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றும்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் என்பவற்றை குறைந்த விலைகளிலேயே அரசாங்கம் வழங்கி வந்தது. இதற்காக ஏற்படும் செலவுகளை திறைசேரியினால் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், தற்போதைய நிலைமையில் அதனைச் செய்ய முடியாது. மண்ணெண்ணெய் தற்போது 87 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்காக 420 ரூபா […]

பண்ணையில் 1,000 பன்றிகள் பட்டினி மரணம்

அமெரிக்காவில் 1,000க்கும் மேற்பட்ட பன்றிகள் இறப்புக்கு காரணமாக இருந்த குற்றத்திற்காக 33 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஐஓவா பகுதியில் அருகருகே இரு பெரிய பன்றி பண்ணை ஒன்று உள்ளது. இதை எலானா லாபேர் என்ற 33 வயது பெண் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், இந்த பண்ணையில் நிர்வாகிக்கும் எலானா அப்பகுதி காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பண்ணையின் எலக்ட்ரிக் பிரேக்கர்களை யாரோ ஒரு நபர் அனைத்து விட்டார். இதன் காரணமாக பண்ணையில் […]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துருக்கிய விமானம் சேதம்!

துருக்கிய எயார்லைன்ஸூக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த போது சேதமடைந்தது. துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து கடந்த 3ஆம் திகதியன்று இலங்கைக்கு வந்த இந்த சரக்கு விமானம் கொழும்பில் இருந்து 45 மெட்ரிக் டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்படவிருந்தது. இந்தநிலையில் விமானத்துக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு கொள்கலன்களில் ஒன்று, கடும் காற்று காரணமாக விமானத்தின் இயந்திரத்துடன் மோதியதால், வலப்பக்க இரண்டாம் இயந்திரப்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமானத்தின் புறப்பாடு […]