இலங்கை திவாலானது பிரதமர் கூறுகிறார் CNN

இலங்கை “திவாலானது” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க் கிழமை கூறினார், நாடு பல தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, இதனால் மில்லியன் கணக்கான மக்கள் உணவு, மருந்து மற்றும் எரிபொருளை வாங்குவதற்கு சிரமப்படுகின்றனர். நாட்டின் “சரிந்த” பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தை நடத்துவது “கடினமானது” என்று விக்கிரமசிங்க சட்டமியற்றுபவர்களிடம் கூறினார், ஏனெனில் 22 மில்லியன் தெற்காசிய நாடு வளரும் நாடாக இல்லாமல், திவாலான நாடாக பேச்சுவார்த்தையில் நுழைந்துள்ளது. “நாம் […]
நாளுக்கு நாள் உயரும் துவிச்சக்கர வண்டி விலை

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடியால் சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதால், இருப்பு தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வியாபாரிகள் துவிச்சக்கர வண்டிகளை நாளுக்கு நாள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்வதாகவும், குறிப்பாக சாதாரண சைக்கிள் விலையை 60,000 ஆகவும், கியர் பைக்கின் விலை 77,000 ஆகவும் உயர்த்தியுள்ளனர். சந்தைகளில் துவிச்சக்கர வண்டிகளில் கையிருப்பு தீர்ந்துள்ளமையினால் இருசக்கர […]
இலங்கையில் அமோனியம் நைத்திரேற்று பற்றாக்குறை

நாட்டில் தற்போது நிலவுகின்ற பல்வேறுபட்ட கைத்தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும் அமோனியம் நைத்திரேற்று வெடிமருந்துப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான மாற்றுப் படிமுறைகளை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கருங்கல் உடைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் அமோனியம் நைத்திரேற்று வெடிமருந்து இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் பகிர்ந்தளித்தலின் ஏகபோக உரிமை மட்டுப்படுத்தப்பட்ட அரச வியாபார கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. நாட்டில் தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறை மற்றும் குறித்த வெடிமருந்தின் நீண்டகால விநியோகத்தரான அரச வியாபாரக் கூட்டுத்தாபனத்திற்கு விநியோகிப்பதற்கு இயலாமல் போனமையால் தற்போது […]
கொழும்பில் லிற்றோ விநியோகம்!

கொழும்பில் ஜூலை 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். ஜூலை 9 ஆம் திகதியன்று எரிவாயு கப்பல் வரவுள்ளதாகவும், இதனையடுத்து ஜூலை 11 ஆம் திகதி முதல் விநியோகம் ஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் தலா 100 கொள்கலன்கள் வீதம் 140 இடங்களில் 12.5 கிலோ எடையுள்ள 140,000 […]
இலங்கைக்கான பயணங்களை தவிருங்கள், பிரித்தானியா. நியூசிலாந்து

இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு பிரித்தானிய வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் தமது பிரஜைகளை கோரியுள்ளது. நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடானது போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகளை பாதிக்கிறது. இதற்கு […]
திருடன் என்று அழைப்பதை நிறுத்துங்கள் – நாமல்

நானும் எனது குடும்பமும் எரிபொருள் பேரங்களில் ஈடுபட்டதாக ஊடகங்களும் சமூக ஊடகங்களும் ஆதாரமற்ற பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. ஒருவரையொருவர் ‘ஹொரா’ ( திருடன் ) என்று அழைத்துக் கொண்டு குற்றம் சாட்டுவதை நான் விரும்பவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “எனது குடும்ப உறுப்பினர்களோ நானோ எந்த எரிபொருள் பேரங்களிலும் ஈடுபடவில்லை. நம் நாட்டை இந்த நெருக்கடியில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். […]
டிசம்பர் வரையில் டொலர் பிரச்சினை தீவிரமாகும்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் கடன் மீளமைப்பு தொடர்பான அறிக்கை வெளியாகும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறினாலும் அது இடம்பெறாது என்று எதிர்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இந்த கருத்தை, இன்று நாடாளுமன்றில் வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் இந்த அறிக்கையை வெளியிட குறைந்தது 6 மாதங்கள் அல்லது ஒரு வருடமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் இதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் வரையில் டொலர் பிரச்சினை தீவிரமாகும் என்று கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். எனவே ஜூலை மாதம் முதல் […]