கனடா மொபைல், இணையத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளது

கனடாவின் மிகப்பெரிய மொபைல் மற்றும் இன்டர்நெட் வழங்குனர் பெரும் செயலிழப்பை சந்தித்துள்ளது, வங்கி ஏடிஎம்கள் மற்றும் அவசர சேவை ஹாட்லைன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ரோஜர்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரச்சினையால் அரசாங்க செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு தழுவிய பிரச்சனைக்கு தீர்வு காண துரிதமாக செயல்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. “எங்கள் வாடிக்கையாளர்கள் தொடர்பில் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம்” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 15 மாதங்களில் இரண்டாவது முறையாக மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. […]

அரிசியை பயன்படுத்தி திரிபோஷா உற்பத்தி

சோளத்திற்கு பதிலாக அரிசியை பயன்படுத்தி திரிபோஷா உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்கள் பல இணைந்து தயாரித்த அவசர போசாக்கு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சின் போஷாக்கு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்க தெரிவித்தார். இந்த திட்டத்தின் பிரகாரம் சிறுவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களின் போசாக்குத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் அனில் சமரநாயக்க குறிப்பிட்டார். புலத்தையும் நிலத்தையும் […]

இம்முறை சிறு போகத்திற்கு பயன்படுத்தப்பட்ட வயல் காணி

இம்முறை சிறுபோகத்தில் பயிரிடப்பட்ட நெல் வயற்காணி ஐந்து இலட்சத்து ஐயாயிரம் ஹெக்டேயரைத் தாண்டியுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரிகள் நேற்று (07) அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ,விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவைச் சந்தித்து உரம் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், அந்தக் கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரமித பண்டார தென்னகோன், ராஜிகா விக்கிரமசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். […]

இலங்கை பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி ஆளுநர்

அடுத்த சில மாதங்களில் இலங்கையின் பணவீக்கம் 70% ஆக உயரக்கூடும். நேற்று (07) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார். எவ்வாறாயினும், மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக, 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பணவீக்கம் வீழ்ச்சி அடையும் என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், 2022 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த […]

சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனம்

சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சமையல் எரிவாயு மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என தாம் கருதுவதாகவும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஆலோசனையின் பின்னர் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் […]

இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய […]

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட(08.07.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com