துவிச்சக்கர வண்டிகளின் பாவனை நாளுக்கு நாள் அதிகரிப்பு

துவிச்சக்கர வண்டிகளின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுக்கு மாற்றீடாக மக்கள் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துகின்றனர். இதனால், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துபவர்களுக்காக தனியான ஒழுங்கைகளை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்ட செயற்பாடாக ஆமர் வீதி, ஹெட்டியாவத்தை ஊடாக கொழும்பு துறைமுக நுழைவாயில் வரையான மருங்கை துவிச்சக்கரவண்டி பயன்பாட்டிற்காக அடுத்த வாரம் அங்குராட்பணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் […]
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ரூபா இல்லை

எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ரூபா இல்லை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருளுக்காக விலை சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது செயற்படுத்தப்படுகின்ற போதிலும், டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அவசியமான ரூபா இதுவரையில் கிடைக்கவில்லை. எவ்வாறேனும் சேகரிக்கப்பட்ட டொலரைப் பெற்றுக்கொள்ள கனியவள கூட்டுத்தாபனத்திடம் ரூபா இல்லை. இதுதான் அடுத்த பிரச்சினையாகும். […]
விதை நெல்லை களஞ்சியப்படுத்த தீர்மானம்

பெரும்போகத்திற்கு தேவைப்படும் விதை நெல்லை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்தமுறை பெரும்போகத்திலும் இம்முறை சிறுபோகத்திலும் ஏற்பட்ட இடையூறுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த சில்வா தெரிவித்தார். அதற்கமைவாக, இரண்டரை இலட்சம் பூசல் விதை நெல் பாதுகாக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். எதிர்வரும் பெரும்போகத்தில் 08 இலட்சம் ஹெக்டேயரில் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அதற்காக 40 இலட்சம் பூசல் விதை நெல் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 85 வீதமான பங்கு, விவசாயிகளால் […]
இலங்கை வந்த வெளிநாட்டவர்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவான காட்சி

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை உலக நாடுகளுக்கு மத்தியில் இலங்கையை பேசுபொருளாக மாற்றியுள்ளது. இலங்கைக்கு வந்த சில சுற்றுலாப் பயணிகள் தம்மோடு சேர்த்து சைக்கிள் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். இன்றைய தினம் இது தொடர்பான காட்சிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவாகியுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
யாழில் திங்கள் முதல் வெதுப்பக உற்பத்தி நிறுத்தப்படும் அபாயம்

திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் தம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது வெதுப்பக உரிமையாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர். “இயற்கை அனர்த்தங்கள் உருவாகும் போது எமது உதவியை மாவட்ட செயலகத்தினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தற்போது எம்மை கைவிட்டுள்ளனர். நாம் எமக்கு டீசலை பெற்று தரக்கோரி பல […]
யாழில் டீசல் பதுக்கல் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிசார் இன்று மாலை கைது செய்தனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த இடத்தை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது 300லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதோடு குறித்த டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் […]
ரஸ்சியா எரிபொருள் பிரதிநிதிகள் இலங்கை வருகை

ரஸ்சியாவின் எரிபொருள் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் இருவர் இன்று மதியம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஸ்சியாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்காக இவர்கள் வருகை தந்துள்ளனர். ரஸ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் எரிபொருள் இறக்குமதி தொடர்பில், தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாவும், கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சாதகமான பேச்சுவார்ததையாக அது அமைந்ததாகவும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரஸ்சியா அதிகாரிகள் […]