இம்முறை சிறு போகத்திற்கு பயன்படுத்தப்பட்ட வயல் காணி

இம்முறை சிறுபோகத்தில் பயிரிடப்பட்ட நெல் வயற்காணி ஐந்து இலட்சத்து ஐயாயிரம் ஹெக்டேயரைத் தாண்டியுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரிகள் நேற்று (07) அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ,விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவைச் சந்தித்து உரம் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், அந்தக் கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரமித பண்டார தென்னகோன், ராஜிகா விக்கிரமசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். […]

இலங்கை பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி ஆளுநர்

அடுத்த சில மாதங்களில் இலங்கையின் பணவீக்கம் 70% ஆக உயரக்கூடும். நேற்று (07) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார். எவ்வாறாயினும், மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக, 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பணவீக்கம் வீழ்ச்சி அடையும் என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், 2022 ஜூன் மாத இறுதியில் இலங்கையின் மொத்த […]

சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனம்

சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சமையல் எரிவாயு மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது என தாம் கருதுவதாகவும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஆலோசனையின் பின்னர் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் […]

இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய […]

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட(08.07.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

யாழ் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவித்தல்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் எரிபொருள் பெறுவதற்கான கோரிக்கையை முன் வைத்த பொதுமக்களின் ஒரு பகுதியினருக்கு முன்னுரிமை அடிப்படையில் ,அவர்களுடைய கோரிக்கை கடிதத்தில் குறிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு இன்று (08) காலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களுக்குரிய எரிபொருள் டோக்கன் வழங்கப்பட்டு யாழ்ப்பாணம் ஐ ஓ சி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். அத்தியாசிய சேவையில் ஈடுபடுவோரில் ஒரு பகுதியினருக்கான பெற்றோல் விநியோகத்தினை […]

தொடருந்து கட்டணம் குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபா

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொடருந்து கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். இதன்படி, தொடருந்து கட்டணத்தை தற்போதைய பேருந்து கட்டணத்தில் பாதி அளவிலும் பார்க்க குறைந்த கட்டணத்தில் அதிகரிக்க முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போதைய குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாவிலிருந்து இருபது ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் […]