ஜனாதிபதி மாளிகையிலிருந்து மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபா காவல்துறையிடம் ஒப்படைப்பு

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக நம்பப்படும் அறையொன்றிலிருந்து நேற்று (09) ஆர்ப்பாட்டக்காரர்களால் மீட்கப்பட்ட, ஒரு கோடியே 78 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கணக்கிட்டு, அங்கு கடமையிலிருந்த விசேட அதிரடிப்படை காவல்துறை அத்தியட்சகர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் அப்பணத்தை கோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரியிடம் பணத்தை ஒப்படைக்குமாறு குறித்த காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த கோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரி பணத்தை பெற்றுக் கொண்டு பணத்தைக் கண்டுபிடித்து எண்ணுவதற்கு […]

ஜனாதிபதி மீண்டும் பணியில்.. எரிவாயுவை விநியோகிக்க ஆலோசனை

இலங்கைக்கு வந்துள்ள எரிவாயு கப்பலில் உள்ள எரிவாயுவை விரைவில் மக்களுக்கு விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு: புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

லிட்ரோ காஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கும்

எதிர்காலத்தில் எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை சுமார் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டிய போதிலும், மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி 50 ரூபாவால் மட்டுமே விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 140 இடங்களில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் […]

பாண் பனிஸ்கள் இனி இல்லாமல் போகும்

தற்போதைய நெருக்கடி மற்றும் பொருளாதார சூழ்நிலையில் , பாண்கள் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இல்லாமல் போகும். அதாவது பேக்கரி உற்பத்திகளை நிறுத்த வேண்டி வரும் என வரும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் (ACBOA) தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார். நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பேக்கரி உணவு உற்பத்திக்கான பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக தற்போது பேக்கரி களில் 50% உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மிகுதியும் […]

கோட்டாபய நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ள செய்தி !

தற்போதைய நிலமையை சரியாகப் புரிந்துகொண்டு, தவறான சித்தாந்தங்களில் சிக்கிக் கொள்ளாமல் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு, ஏற்றுமதி மற்றும் விவசாயப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து புதிய முதலீடுகளுடன் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. ஆனால் உலகம் முழுவதும் எதிர்கொண்ட கொவிட் தொற்றுநோய் நிலைமை அனைத்து நாடுகளையும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் […]

இராஜிநாமா: பிரதமரிடம் இருந்து விஷேட அறிக்கை.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு பெரும்பான்மைப் பலத்தை அறிவித்ததன் பின்னர் பிரதமர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதுவரை நாட்டின் விவகாரங்களை முன்னெடுத்துச் செல்ல பிரதமராக பணியாற்றுவேன் என்றார். இன்று இலங்கையில் எரிபொருள் பிரச்சினையும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக உலக உணவு அமைப்பின் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடன் சில முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். எனவே தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்த பின்னர் உடனடியாக வேறொரு […]

தம்மிக்க பெரேராவும் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கையின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக பெரேரா தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச பதவி விலகியதால் தம்மிக்க பெரேராவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. பசில் ராஜபக்ச பதவி விலகியதன் பின்னர் வெற்றிடமாக இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தம்மிக்க […]