பதவி விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமரிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் புதன்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு முன்னர் அறிவித்திருந்தார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

பிரதமரின் வீட்டுக்கு தீ வைப்பதற்கு முன்னர் மின்சாரம் துண்டிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைப்பதற்கு முன்னர் குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை 6 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்படாத நிலையில் குறித்த பகுதியில் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டமையானது திட்டமிடப்பட்ட செயற்பாடா? என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் […]

அமைச்சர்கள் நால்வர் இராஜினாமா

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார். பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு இடமளித்து, தாம் இதுவரை வகித்த போக்குவரத்து, ஊடக, மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு பதவியை இராஜினாமா செய்து, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக பந்துல குணவர்தன தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியை இராஜினாமா […]

எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது!

3 ,700 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் 11ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில். 3,700 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த மாதத்திற்குள் 30,000 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அண்மையில், […]

மைத்திரிபால முன்வைத்துள்ள 10 யோசனைகள்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். நாட்டில் எழுந்துள்ள மக்கள் எதிர்ப்பின் பிரகாரம், தற்போதைய ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ அதிகாரத்தில் இருப்பதற்கு அரசியல் ரீதியாக அல்லது தார்மீக ரீதியாக உரிமை இல்லை என அதில் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை மூலம் பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 10 யோசனைகளை முன்வைத்துள்ளது. அவையாவன… 1. ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் 2. ஜனாதிபதி […]

எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்பித்தது IOC

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்தது. அதிகபட்ச செயற்றிறனுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா குறிப்பிட்டார். இதற்காக, திருகோணமலை முனையத்தின் செயற்பாடுகளை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்றும் நேற்று முன்தினமும் லங்கா IOC நிறுவனம், தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கவில்லை. திட்டமிடப்பட்ட போராட்டங்களைக் கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கான அறிவுறுத்தல்களைப் பெற்றதாக கடந்த 8 […]

விவசாயிகளுக்கு ஒரு மூடை யூரியா உரம் 10,000 ரூபா

இந்திய அரசினால் வழங்கப்படும் யூரியா உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு மூடை உரத்தினை 10,000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்திய கடன் வசதியின் கீழ், ஓமனிலிருந்து யூரியா உரம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலையில் தாமதம் ஏற்படுகின்ற போதிலும், கூடிய விரைவில் உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் […]