தேர்தலில் களத்தில் மூவர்! சஜித் விலகல்!

இலங்கையின் நாடாளுமன்றில் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடமாட்டார். பதிலாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் டளஸ் அழப்பெருமவின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாசவே இன்று முன்மொழிந்தார். இதனை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழிமொழிந்தார். இதனையடுத்து பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தெரிவுக்காக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன முன்மொழிந்தார். இதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார். தேசிய மக்கள் […]
இலங்கையில்15 இலட்சம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளனர்

தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக நிர்மாணப்பணிகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டட தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக சுமார் 15 இலட்சம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் M.D. போல் தெரிவித்தார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
பல்பொருள் அங்காடிகளுக்கு முன்னால் சைக்கிள்களுக்கும் இடம்

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால் பலர் சைக்கிள்களை பயன்படுத்தப் பழகிவிட்டனர். கொழும்பில் பலர் துவிச்சக்கர வண்டியில் பயணிப்பதைக் காண முடிகிறது. கொழும்பிலுள்ள சில பல்பொருள் அங்காடிகளுக்கு அருகில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. கொழும்பு கொம்பனி வீதியில் அமைந்துள்ள ‘கொழும்பு சிட்டி சென்டருக்கு’ முன்பாக சைக்கிள் தரிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி […]
சிறுபோக நெற்செய்கை அறுவடை ஆரம்பம்

வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 12,000 ஏக்கர்களில் மேறகொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கை அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் அறுவடைக்கு 20 லீற்றர் டீசல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்முறை சேதன பசளையை பாவித்தே சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அறுவடை சற்று குறைந்த போதும் ,சந்தையில் நெல் விலை அதிகரித்துக் காணப்படுவதன் காரணமாக தமக்கு அதிக இலாபம் கிடைப்பதாக பிரதேச விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புலத்தையும் நிலத்தையும் […]
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 60 சதம் விற்பனை பெறுமதி 368 ரூபா 34 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 423 ரூபா 2 சதம். விற்பனை பெறுமதி 439 ரூபா 86 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 38 சதம் விற்பனை பெறுமதி 373 ரூபா 69 சதம் சுவிஸ் பிராங் […]
2 கப்பல்களிலிருந்து டீசல் தரையிறக்கம்

நாட்டை வந்தடைந்துள்ள பெற்றோலின் மாதிரி தற்போது தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும், அவற்றை தரை இறக்கும் பணி நாளை தொடங்கும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், சிலோன் பெட்ரோலிய சேமிப்பு முனையத்தின் (CPSTL) பிராந்திய களஞ்சியசாலைகளுக்கு நாளை தொடருந்து மற்றும் தாங்கி ஊர்திகள் மூலம் விநியோகம் தொடங்கப்படும் என்றார். இதேவேளை, இரண்டு சரக்கு கப்பல்களில் டீசல் இறக்கும் பணி கொழும்பு துறைமுகத்தில் நிறைவடைந்துள்ளதுடன், மற்றுமொரு […]
ஆடைத் தொழில் துறையில் பணிபுரிந்த பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக மாறும் போக்கு அதிகரிப்பு

தி மோர்னிங் ஆய்வு ஆடைத் தொழில் துறையில் பணி புரியும் பெண்கள் பொருளாதார நெருக்கடியால் தமது முதலாளிகளால் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில் தங்கள் பொருளாதார பிழைப்புக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது என தி மோர்னிங் (The Morning) தெரிவித்துள்ளது. தி மோர்னிங் நடத்திய விசாரணையில், தற்போதைய சூழ்நிலையால் ஆடைத் தொழிலில் வேலை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் பல பெண் தொழிலாளர்கள், வருமானத்தை உறுதி செய்வதற்காக மாற்றுத் தொழிலைத் […]