எரிபொருள் பெற காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும்!

முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான காவல்துறை நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரியுள்ளார். ட்விட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில், எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே எரிபொருள் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விவசாய […]

உயர் பதவிகளுக்கு புதிதாக 3 பேர்

இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக பீ.பி.எஸ்.சி. நோனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். இலங்கை சுங்கத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள அவர், முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக செயற்பட்டுவந்தார். இதேவேளை, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக, டீ.ஆர்.எஸ். ஹப்புஆரச்சியும், திறைசேரியின் பிரதி செயலாளராக டபிள்யூ.ஏ.சத்குமாரவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com […]

கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புகிறார்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகவில்லை என்றும் தான் அறிந்தவகையில், சிங்கப்பூரில் இருந்து அவர் இலங்கைக்கு திரும்புவாரெனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு மற்றும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அவர் இலங்கை திரும்பவுள்ளதாக வெளியான செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பில் அமைச்சரிடம் […]

QR முறைமைக்கு எரிபொருள் விநியோகம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர நடைமுறை இன்று(26) முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, நாடளாவிய ரீதியிலுள்ள சிபெட்கோ மற்றும் லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப அல்லது உபகரண குறைபாடுகள் நிலவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், அதனை நிவர்த்தி செய்யும் வரை வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க முடியமென அமைச்சு கூறியுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் […]

பதிவு செய்தால் மாத்திரமே எரிபொருள்: காஞ்சன

முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார். டுவிட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில், எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே எரிபொருள் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் […]

கடனட்டை வட்டி வீதம் மேலும் அதிகரிப்பு

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை மேலும் அதிகரித்துள்ளன. இதன் மூலம் கடன் அட்டைக்கான வருடாந்த வட்டி விகிதம் 36 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. ஏப்ரல் 08 ஆம் திகதி, மத்திய வங்கியின் நாணயச் சபையானது,கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களில் விதிக்கப்பட்ட உச்ச வட்டி விகிதத்தை நீக்க தீர்மானித்ததை தொடர்ந்து ,வட்டி விகிதங்கள் 18 வீதத்தில்லிருந்து 24 வீதமாகவும் , அதனை தொடர்ந்து 30 வீதமாகவும் , […]

மதுவரித் திணைக்களம் புதிய திட்டம்

மதுபான போத்தல்கள் மற்றும் பியர் கேன்கள் போலியானவையா என்பதனை கண்டறிந்து கொள்வதற்கு ஸ்டிக்கர் குறியீடு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை ஸ்கேன் செய்வதன் மூலம் அவற்றின் உற்பத்தியாளர், உற்பத்தி திகதி, உள்ளடக்கம் உள்ளிட்ட விபரங்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள ஓர் விசேட செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. […]