திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக திரிபோஷா உற்பத்தி கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத் திட்டம் அண்மையில் இணக்கம் தெரிவித்திருந்தது. உலக உணவுத் திட்ட அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே தற்போது திரிபோஷா உற்பத்தி மீண்டும் […]

எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு பணப்பரிசு

சட்டவிரோதமான முறையில் எரிபொருளினை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்கமைய 100 லீற்றர் வரையான பெற்றோல் அல்லது டீசலை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், 100 முதல் 500 லீற்றர் வரையிலான எரிபொருளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 02 இலட்சம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது. அத்துடன், 500 […]

சிங்கப்பூரில் தங்கியிருக்க கோட்டாபயவுக்கு அனுமதி!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றபோது வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதி (short term visit pass) 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. பாரிய எதிர்ப்பு போராட்டங்களையடுத்து கடந்த 13 ஆம் திகதி இலங்கையை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய […]

முன்னணி செயற்பாட்டாளர் விமானத்தில் கைது

கோட்டா கோகம போராட்ட குழுவின் முன்னணி செயற்பாட்டாளர் தானிஸ் அலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று பிற்பகல் விமானத்துக்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நான்கு இடங்களுக்கு அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

இலங்கை மீள 5 வருடம் ஆகும்….

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் குமாரசாமி எச்சரிக்கை புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

சீனாவுக்கு செல்லும் ஜனாதிபதி ரணில்

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். கொழும்பிலும் ஹம்பாந்தோட்டையிலும் சீனாவின் ஆதரவுடன் கூடிய பரந்த துறைமுகத் திட்டங்களுக்கு மேலதிக முதலீட்டை மேற்கொள்வதன் […]

முன்னொருபோதும் இல்லாத வகையில் வருமானம்

தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மூலம் கடந்த மாதம், முன்னர் எப்பொழுதும் இல்லாத வகையில் வருவாய் கிடைத்துள்ளது. இக்காலப்பகுதியில் 537 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயாக கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் முதல் அரையாண்டு காலப்பகுதியில் 2.8 பில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ளதாக தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர். கொவிட்-19 பரவல் காரணமாக முன்னர் பின்னடைவை சந்தித்திருந்த ஆடை உற்பத்தி தொழிற்துறை, தற்போது பழைய நிலைமைக்கு வருவதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, இலங்கையில் இருந்து தைக்கப்பட்ட ஆடைகள் அமெரிக்காவுக்கே அதிகளவில் ஏற்றுமதி […]