கிளிநொச்சியில் உர விநியோகம் ஆரம்பம்

அனைத்து கமநல சேவை நிலையங்கள் ஊடாக ஏக்கருக்கு 20 கிலோ வீதம் சிறு விவசாய நடவடிக்கைகளுக்கான உரம் விநியோகிக்கப்பட்டது. இதன்படி, புளியம்பொக்கனை கமநல சேவை நிலையத்தின் ஊடாக சிறு நெற்செய்கைக்கான யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. கமநல சேவை நிலையத்தின் ஊடாக யூரியா மூடை ஒன்றின் விலை 10,000 ரூபாவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் யூரியா உரம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் […]

20 இலட்சம் எரிவாயு வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் – லிட்ரோ தலைவர்

நாட்டில் 20 லட்சத்துக்கும் அதிகமான சமையல் எரிவாயு கொள்கலன்களை இந்த மாதத்தில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களுக்கு தொடர்ந்தும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார். இதற்கமைய நேற்றைய தினமும் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்தது. அதனை தரையிறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அத்துடன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று […]

16 கோடி ரூபா இரத்தினக்கற்களை கொள்ளையிட்டதாக இருவர் கைது

கொழும்பு – பாலத்துறை பிரதேசத்தில் 15 கோடியே எண்பத்தேழு இலட்சத்து 35,000 பெறுமதியான இரத்தினக் கற்களை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குருந்துவத்தை – அலெக்ஸான்ட்ரா பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் கடந்த 8ஆம் திகதி இரத்தினக் கற்கள் அடங்கிய பெட்டகம் ஒன்று கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். அதன்படி, சுமார் 16 இரத்தினக் கற்கள் இவ்வாறு கொள்ளையிட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் […]

QR முறைமையின் கீழ் மாத்திரமே எரிபொருள்

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாளை முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது. எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக ஒரு வார காலம் உள்ளமையினால் நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரியுள்ளார். இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை என்ற ஞசு முறைமைக்கு இன்று முதல் வாகன வருமான அனுமதி பத்திரத்தை கொண்டு பதிவு […]

பணவீக்கம் 2022 யூலையில் 60.8 சதவீதத்தைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 யூனின் 54.6 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 60.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. முழுவடிவம் அதற்கமைய, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 யூனின்; 80.1 சதவீதத்திலிருந்து 2022 யூலையில் 90.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 […]

இலங்கையில் பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்

பாரிய பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கை, இப்போது பெண்கள் விடயத்தில் மற்றொரு இக்கட்டான நிலையை எதிர்கொள்வதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது. ,ஆடைத் துறையில் பணியாற்றிய பெண்கள் பலர், பொருளாதார நெருக்கடியால், வேலை இழந்துள்ளனர், இதனையடுத்து, அதில் பலர், வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை அடுத்து, 22 மில்லியன் இலங்கையர்கள் பாரிய கஷ்டங்களையும் வறுமையின் வாய்ப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் […]

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை செப்டம்பருக்கு சென்றுள்ளது

இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து திவாலான நாட்டை மீட்டெடுக்க உதவும் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடந்த வாரங்களாக ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செப்டெம்பர் மாதத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஒரு உடன்படிக்கையை எட்ட இலக்கு வைத்திருந்தாலும், தற்போது அது ஒரு மாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு மீட்புப் பொதி குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்கள் நகரவில்லை என்று விக்கிரமசிங்க […]