ரைஸ், கொத்து விலைகள் குறைக்கப்படும்!

எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என்றும், எரிவாயு விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படுவதால் மூடப்பட்டிருந்த பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்தால், உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை 20% குறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலையும் ஏராளமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புலத்தையும் […]

இறுதி இலக்க முறைமை ரத்து – மோசடிகள் தொடர்பில் அவதானம்

நாடளாவிய ரீதியில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமையான QR முறைமையின் கீழ் மாத்திரம் இன்று முதல் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வாகனத்தின் இலக்கத்தகட்டில் உள்ள எண்னையும், தேசிய எரிபொருள் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாகன இலக்கத்தையும் சரிபார்த்து எரிபொருளை விநியோகிக்குமாறு சகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 1140 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது. மோசடிகள் […]

இன்று QR முறைமை எரிபொருள் இன்மையால் மக்கள் அவதி

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையான QR முறைமையின் அடிப்படையில் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது. சில எரிபொருள் நிலையங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மேலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம், சில எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப்பெறாமை காரணமாக வாகனங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். வலுசக்தி அமைச்சின் ஊடாக 1, 140 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR […]

சமையல் எரிவாயு விலை குறைவடைகிறது!

லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விற்பனை விலை குறைக்கப்படவுள்ளதாக என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி முதல் விலை குறைக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது, 12.5 கிலோகிராம் எடை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 4,910 ரூபாவாக காணப்படுகிறது. அத்துடன், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் முறையே 1971 ரூபா, 914 ரூபாவாக காணப்படுகிறது […]

இன்று முதல் இனி பிறப்புச் சான்றிதழில் அடையாள இலக்கம்

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் 14 திகதிய அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறப்பின்போது, பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச்சான்றிதழில், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு செய்யப்படவுள்ளது. மேற்படி இரு திணைக்களங்களுக்கும் இடையில் இணையம் மூலம் தகவல்கள் பரிமாற்றம் இடம்பெறும். இந்த புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும், பரீட்சார்த்த திட்டம் […]

கோட்டா நாடு திரும்புவதற்கு சரியான நேரம் இதுவல்ல, ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரம் அல்லவென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்று (31) அளித்த செவ்வியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சி, காரணமாக நாட்டில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது திரும்பினால், அவரை, வெளியேற்றுவதற்காக அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மத்தியில் மீண்டும் எதிர்ப்பலைகளை தூண்டக்கூடும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், […]

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.368.50 ஆக பதிவாகியுள்ளது. யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் பஹ்ரைன் மற்றும் குவைத் தினார்களின் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com