இனி வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை!

அரச அலுவலகங்களை வெள்ளிக்கிழமைகளில் மூடுவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். அண்மைய நாட்களில் நிலவிய போக்குவரத்து நெருக்கடி காரணமாக வெள்ளிக்கிழமையை அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவித்து பொதுநிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது. எனினும், தற்போது, பொதுப்போக்குவரத்து படிப்படியாக வழமைக்கு திரும்பிவருகிறது. போக்குவரத்திலிருந்து விலகியிருந்த 800 பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபை மீள சேவையில் […]

இலங்கையின் நிலைமைகளை இங்கிலாந்து அவதானிப்பு

இலங்கையில் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தமை உட்பட வேகமாக நகரும் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அமைதியான, ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கண்டறிய அனைத்துத் தரப்புகளையும், ஊக்குவிப்பதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. சட்டத்தின் ஆட்சியை மதிக்கவும், வன்முறை மற்றும் சேதங்களைத் தவிர்க்கவும் அனைத்து தரப்பினரையும் கோருவதாகவும் இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் அமண்டா மில்லிங் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் […]

ஆடை உபகரணங்கள் இறக்குமதிக்கு வரிச் சலுகை!

உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்வை வரிச்சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கைத்தொழில் அமைச்சர் இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். கொவிட்-19 தொற்றின் தீவிர பரவல் நிலையிலும், இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் பிரதான துறையாக ஆடைக்கைத்தொழில் காணப்படுகிறது. எனினும், தற்போது மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்கள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதற்கு தீர்வளிக்கும் வகையில், ஒத்திசைவு […]

இலங்கை 22வது திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை மேற்கொள்வதற்கு நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, நீதி அமைச்சர் சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை மேற்கொள்ளும் நோக்கில் தன்னால் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்திற்கு அமைச்சரவை நேற்றைய தினம் அனுமதி வழங்கியதாக அவர் கூறுகின்றார். இதன்படி, அமைச்சரவையினால் […]

இலங்கையில் வாகனங்களின் எண்ணிக்கை 8 மில்லியன், QR System இல் பதிவு 5 மில்லியன்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் மொத்த எண்ணிக்கை அரச தரவுகளின்படி சராசரியாக 8 மில்லியன். தற்பொழுது வரை QR System இல் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக 5 மில்லியன். பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் வாரம் ஒன்றுக்கு ஒரு தடவை படி எரிபொருள் நிலையத்துக்கு வருகை தந்தாலே ஒரு நாளைக்கு 714,285 பேர் எரிபொருள் நிலையங்களுக்கு வருகை தருவர். இலங்கை முழுவதும் ஏறக்குறைய 1,190 எரிபொருள் நிலையங்கள் இருக்கின்றன. அந்த எரிபொருள் நிலையங்கள் அனைத்தும் […]

எரிபொருள் விலை திருத்தம் இன்றிரவு-எரிசக்தி அமைச்சு

எரிபொருள் விலை இன்று குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதன்படி, எரிபொருள் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு புதிய விலை இன்று திங்கட்கிழமை பிற்பகல் அறிவிக்கப்படலாம் என அமைச்சரின் அறிவிப்பை மேற்கோள்காட்டி […]

மஹிந்த – பெசிலுக்கான வெளிநாட்டு பயணத்தடை மேலும் நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருக்கான வெளிநாட்டு பயணத்தடை எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிய மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை […]