கப்பலில் இருந்து டீசல் தரையிறக்கம்

மற்றுமொரு டீசல் கப்பலுக்கான கொடுப்பனவு நேற்று (02) செலுத்தப்பட்டது. அதற்கமைய, குறித்த டீசல் தொகை இன்று தரையிறக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு வருட உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், எதிர்வரும் 12 -14 ஆம் திகதிகளில் முதலாவது தொகை கிடக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெற்றோல் கொள்கலன் மற்றும் ஒரு டீசல் கொள்கலன் ஆகியவற்றிற்கு பகுதியளவு முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். […]
வரலாறு காணாத நெருக்கடிக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம். ரணில்

பல வருட காலமாக தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான விடயங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார். யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை இன்று (03) ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிடடார்.. அம்மக்களின் தீர்க்க வேண்டிய காணிப் பிரச்சினைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் […]
சீனாவின் கப்பல்! விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்காக ….

சீனாவின் விஞ்ஞான கப்பல் இலங்கையின் துறைமுகத்துக்கு வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கடற்கரையோரத்தில் உள்ள முக்கிய நிறுவல்களில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. சீனாவின் கப்பல் வருவதை அடுத்து தமிழகத்தின் 1076 கிலோ மீற்றர் கடற்கரையில் கடல் துறைமுகங்கள் மற்றும் அணு உலைகள் போன்ற முக்கிய நிறுவல்கள் இருப்பதால் […]
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. . நாட்டில் அரிசி, மா, சீனி, பருப்பு, நெத்தலி கருவாடு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாக வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.டி கொடிகார தெரிவித்துள்ளார். மேலும், அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கு ஏற்ப மீள் இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் […]
பெலோசி தாய்வான் சென்று இறங்கி உள்ளார்

பெலோசி விமானத்திலிருந்து வெளிவருகிறார் தைவானில் உள்ள விமான நிலையத்தில் பெலோசி விமானத்தை விட்டு வெளியேறுவதை நாங்கள் இப்போது பார்த்தோம். அவள் விமானத்தின் படிகளில் இறங்குவதையும், ஒரு சிறிய குழுவால் சந்திப்பதையும் காணலாம். சீன சமூக ஊடகங்கள் தேசியவாதத்தால் மூழ்கியுள்ளன சீனாவின் மிகவும் மிதமான சமூக ஊடக தளங்களில், கருத்துக்கள் பெரும்பாலும் பெலோசியின் வருகையை கடுமையாக எதிர்த்தன மற்றும் இராணுவ நடவடிக்கையை ஊக்குவித்தன. பல சமூக ஊடக பயனர்கள் தங்கள் நாட்டின் “வெற்றியை” எதிர்பார்த்து தைவானை “மீண்டும் எடுக்க” […]
3 கிலோ தங்கமும் 39 கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல்

சட்டவிரோதமாக தங்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை வௌிநாட்டிலிருந்து கொண்டு வந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயிலிருந்து வருகை தந்த சந்தேகநபர்களிடமிருந்து தீர்வை வரி செலுத்தப்படாத 03 கிலோகிராம் தங்கமும் 39 கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 4 ஆண்களும் 2 பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அக்குரணை, நீர்கொழும்பு மற்றும் திருகோணமலையை சேர்ந்தவர்களே கைது […]
எரிவாயு கொள்கலன்களுக்கான வைப்புப் பணம் அதிகரிப்பு

லிட்ரோ நிறுவனத்தின் புதிய வெற்று எரிவாயு கொள்கலன் கொள்வனவின்போது, செலுத்தப்படும் வைப்பு பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுலை 29 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 2.3 கிலோகிராமுக்கு 7,000 ரூபாவாகவும், 5 கிலோகிராமுக்கு 11,000 ரூபாவாகவும், 12.5 கிலோகிராமுக்கு 14,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 37.5 கிலோகிராமுக்கான வைப்புப் பணத்தொகை 35,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் […]