மாலை 5 மணிக்கு முன் காலி முகத்திடலை விட்டு வெளியேறுங்கள்

காலிமுகத்திடலையும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களையும் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை வெள்ளிக்கிழமை (5) மாலை 5 மணிக்கு முன்னர் தமது போராட்ட இடங்களிலிருந்து வெளியேறுமாறு கோட்டை பொலிஸார் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அரச அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதியற்ற கட்டுமானங்களை நிறுவி பயிர்களை பயிரிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மக்களின் பொருள் உரிமைகள் பறிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர் . மேலும், ஆகஸ்ட் 5ஆம் […]
கடலில் நின்ற டீசல் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது

இலங்கை கடற்பரப்பில் பணம் செலுத்த முடியாமல் பல நாட்களாக நங்கூரமிட்டிருந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் கப்பலுக்கு நேற்று (03) பணம் வழங்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் செய்தியில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மற்றுமொரு பெற்றோல் கப்பல் மற்றும் ஒரு கப்பலுக்கான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வருட காலத்துக்கு விமான […]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆரம்பமாகும் முறுகல் நிலை !

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆரம்பமாகும் முறுகல் நிலை ! புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
வெளிநாட்டு நாணயங்களின் விபரங்கள் கோரப்படாது

வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்தால் அவை எங்கிருந்து கிடைத்தன என்ற விபரங்களை வழங்காமலேயே வங்கிகளில் பாதுகாப்பாக மாற்ற முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். உண்டியல் மற்றும் ஹவாலா போன்ற சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. அவற்றினூடாக நாட்டுக்கு இழப்பு ஏற்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணத்தை அனுப்புவதற்கு சட்டரீதியான முறைமைகளை பின்பற்றுமாறு ஊக்குவிக்கப்படுகிறது. அவ்வாறு சட்டரீதியாக பணத்தைப பரிமாற்றும் போது அவர்களுக்கு […]
இலங்கையில் தமிழர்களை கையாண்ட விதமே போருக்கு வழிவகுத்ததது- இந்திய

அரசியல்வாதிகள் வேலைவாய்ப்பை தங்களால் உருவாக்க முடியாதபோது அதனை மறைப்பதற்காக சிறுபான்மையினத்தவர்களை தாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை இலங்கை அனுபவிக்கின்றது என இந்திய ரிசேர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். லிபரல் ஜனநாயகத்தையும் அதன் கட்டமைப்புகளையும் வலுப்படுத்துவதிலேயே இந்தியாவின் எதிர்காலம் தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மை வாதம் குறித்து எச்சரித்துள்ள அவர் வேலைவாய்ப்பு நெருக்கடியிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக அரசியல்வாதிகள் சிறுபான்மையினத்தவர்களை தாக்குவதால் என்ன […]
கோழி இறைச்சி விலை குறைவடையும்

பெரும் போகத்தில் 60,000 ஹெக்டெயர் சோளத்தை பயிரிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கால்நடைகளின் உணவுக்காக பயன்படுத்தப்படும் சோளம் பற்றாக்குறை காரணமாக தற்போது பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இறக்குமதிக்கு போதிய அந்நிய செலாவணி இல்லாததாலும், சோளம் விளையும் நாடுகள் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்யாததாலும் கால்நடைகளுக்கான உணவு பற்றாக்குறை நிலவுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதனால், எமது நாட்டுக்குத் தேவையான சோளத்தை பயிரிடுவதைத் […]
மசகு எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று 95.66 டொலராக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் இது 99.91 டொலராக இருந்தது. WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95.80 டொலராகப் பதிவாகியுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com