இலங்கை தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் உயர்மட்ட கலந்தாய்வு!

இலங்கையில் நிலவும் நிலைமை குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளன. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் இலங்கையின் நிலைமை குறித்து கலந்துரையாடினார். ஜெய்சங்கருடனான சந்திப்பின் போது யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் தாக்கங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விவாதித்ததாக பிளின்கன் ட்வீட் செய்துள்ளார். கம்போடியாவில் உள்ள புனோம் பென் நகரில் அமெரிக்க – ஆசியான் அமைச்சர்கள் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு […]
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை…

அந்த வகையில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அத்தோடு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு என மக்கள் தம்முடைய அன்றாட வாழ்க்கையை வாழமுடியாத நிலையில் காணப்படுகின்றனர். இந்நிலையில் நாட்டில் அரிசி, மா, சீனி, பருப்பு, நெத்தலி கருவாடு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.டி கொடிகார தெரிவித்துள்ளார். மேலும், அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கு ஏற்ப மீள் இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 10 பொருட்கள் அத்தியாவசியப் பொருட்களாக அடையாளம் […]
இறந்த தாயின் பிணத்தை மரப்பலகையில் கட்டி எடுத்து சென்ற மகன்கள்!

இறந்த தாயின் உடலை மரப்பலகையில் கட்டி இருசக்கர வாகனத்தில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு அவரது மகன்கள் எடுத்துச் சென்ற சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது. அனுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்மந்திரி யாதவ் என்பவர் நெஞ்சுவலி காரணமாக ஷஹதோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறந்த தாயின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அம்புலன்ஸ் வசதியை மருத்துவமனை […]
இலங்கை, ரஸ்யா வர்த்தகத்தில் 9 பில்லியன் டொலர்களை எதிர்பார்க்கும் இந்தியா!

ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை அனுமதித்த பின்னர் அடுத்த இரண்டு மாதங்களில் ரஷ்யா மற்றும் இலங்கையுடன் 8-9 பில்லியன் டொலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்தை இந்தியா எதிர்பார்க்கிறது என்று இந்தியாவின் வர்த்தக செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமணியம் கூறியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை மாற்றத்தக்க ரூபாயில் கொடுப்பனவுகளை செலுத்த அனுமதித்தது. இது டொலர்களை நம்புவதற்குப் பதிலாக ரஷ்யா மற்றும் தெற்காசிய அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதாக அமைந்துள்ளது. ரூபாய் மதிப்பிலான விற்பனை ஒரு […]
மின்சாரம், எரிபொருள், சுகாதாரம்.. அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசியமான பொதுச் சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் எண்.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார வழங்கல், பெற்றோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் மற்றும் அனைத்து சேவைகள், வேலைகள் அல்லது உழைப்பு, பராமரிப்பு மற்றும் வரவேற்பு தொடர்பாக தேவையான அல்லது செய்ய வேண்டிய விவரங்கள், […]
திரிபோஷா நிறுவனம் வௌியிட்டுள்ள அறிவிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலூட்டும் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான சுமார் 720,000 திரிபோஷா பொதிகளை தற்போது தயாரித்துள்ளதாக அதன் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என்று நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் […]
3 வாரங்களில் 25 இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம்

கடந்த 22 நாட்களில் 25 இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதேச விற்பனையாளர்களுக்கு தொடர்ந்தும் விநியோகிக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தினத்தில் 140,000சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com