சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட எரிபொருள் அனுமதிப்பத்திரம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் வைத்து டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதி அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வாகனம் அல்லாத பிற எரிபொருள் தேவைகளுக்கான QR. குறியீடுகளை வழங்க பதிவு செய்வதற்கான வசதிகளை வழங்குதல், ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து வியாபாரப் பதிவு இலக்கத்தின் மூலம் பல வாகனப் பதிவு, அரசாங்க வாகனப் பதிவின் சார்பாக அந்த நிறுவனத்திற்கு தனிப்பட்ட பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் […]
சடுதியாக குறைந்த அத்தியாவசிய பொருட்களின் விலைகள்

அத்தியவாசிய பொருட்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. பருப்பு, சீனி , கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய 600 ரூபாவாக இருந்த பருப்பு மொத்த விலை 410 ரூபாவாகவும், 330 ரூபாவாக இருந்த சீனியின் மொத்த விலை 270 ரூபாவாகவும், 215 ரூபாவாக இருந்த உருளைக்கிழங்கின் மொத்த விலை 150 ரூவாகாவும் குறைக்கப்பட்டுள்ளது. 600 ரூபாவாக இருந்த வெங்காயத்தின் […]
இந்தியாவில் வீட்டில் எவ்வளவு பணம் தங்கம் வைத்திருக்கலாம்

இந்தியாவில் ஒரு குடும்பத்தில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள், ஆண்கள் எவ்வளவு நகைகளை வீட்டில் வைத்திருக்கலாம் என இந்திய வருமானவரித்துறை அறிவித்துள்ளது. இந்திய வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமணமான பெண்கள் 62.5 பவுன் வரையிலான தங்க நகைகளை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். அதே சமயம் திருமணமாகாத பெண்கள் 31,25 பவுன் நகைகளை வைத்து கொள்ளலாம். ஆண்கள் 12.5 பவுன் தங்கத்தை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி உண்டு என் குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியம் போன்ற காரணங்களை […]
முருங்கைக்காய் அறுவடை

கிண்ணியா பிரதேசத்தில் தற்போது ,முருங்கைக்காய் அறுவடை இடம்பெற்றுவருகிறது. கிண்ணியா பிரதேசத்தில் காக்காமுனைஇ குறிஞ்சாக்கேணிஇசம்மாவச்சதீவுஇ பெறியாற்றுமுனைஇ முனைச்சேனைஇ கச்சக்கொடுத்தீவுஇ பூவரசந்தீவுஇ பைசல் நகர்இ சின்னக் கிண்ணியாஇமாஞ்சோலைஇமஹ்ரூப் நகர்இநடுத்தீவுஇ மற்றும் பெரிய கிண்ணியா ஆகிய இடங்களில் முருங்கைக்காய் அறுவடை இடம்பெற்றுவருகிறது. கிண்ணியாவிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 10 கிலோவுக்கு மேற்பட்ட முருங்கைக்காய் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைத்துக்கு அனுப்பப்படுகின்றன. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் […]
தாய்வானை சுற்றி ஏவுகணை வீச்சு நடத்தும் சீனா!

தமது தீவைச் சுற்றியுள்ள கடலில் ஏவுகணைகளை வீசுவதன் மூலம் சீனா, வடகொரியாவைப் பின்பற்றுவதாக தாய்வான் குற்றம் சுமத்தியுள்ளது. தாய்வானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையை சுற்றியுள்ள கடல் பகுதியில் சீனா 11 போலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்தைத் தொடர்ந்து தாய்வானின் கடற்கரையிலிருந்து மைல் தொலைவில் இந்த ஏவுகனைகள் ஏவப்பட்டுள்ளன. சீனாவின் வலுவான நட்பு நாடான வடகொரியா அண்மைய மாதங்களில் மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தி பிராந்தியத்தில் பதற்றத்தை […]
பாதுகாப்பாக வைக்குமாறு எரிசக்தி அமைச்சர் கோரிக்கை!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்துபவர்கள் QR குறியீட்டை மற்றையவர்களுக்குத் தெரியும்படியான இடத்தில் காட்சிப்படுத்த வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரியுள்ளார். வேறு எவரும் சட்டவிரோதமாக அதைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய, அதனை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறும் அவர் கோரியுள்ளார். அத்துடன், தற்போதைய சுயவிவர அம்சத்தை (profile feature) நீக்குவதற்கான தெரிவும், மீண்டும் பதிவு செய்வதற்கான தெரிவும் தற்போது கிடைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீட்டைப் பயன்படுத்துவோருக்கு எதிராக […]
ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு!

நாளைய தினம் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் நாளை (5) இரவு நேரத்தில் மாத்திரம் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலாகுமென அவ்வாணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை, நீர் வளப்பற்றாக்குறை மற்றும் அனல் மின்நிலைய மின்பிறப்பாக்கி செயலிழப்பு போன்ற விளைவுகளால், போதிய மின் உற்பத்தியின்மை காரணமாக மின்சார விநியோகத்தை முகாமை செய்வதற்கு, மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்துவருகிறது. […]