இலங்கையின் விளம்பர பிரசாரத்தை சீன சமூக ஊடகத் தளம் தடை செய்தது

சீனக் கப்பலின் வருகையை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த விளம்பரப் பிரசாரத்தை சீன சமூக ஊடகத் தளம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கை அதிகாரிகள் இந்த பிரச்சாரத்தை வெள்ளிக்கிழமை ‘Douyin’ இல் தொடங்க ஏற்பாடு செய்தனர். எனினும் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என இலங்கை தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து ‘யுவான் வாங் 5’ ஆராய்ச்சிக் கப்பலின் துறைமுக அழைப்பை இலங்கை ஒத்திவைத்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது நடந்ததாக இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர். […]
தாய்லாந்து செல்கிறார் கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,நாளைய தினம் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியையடுத்து, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கையகப்படுத்தியதால் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 14ஆம்திகதி மாலைத்தீவு வழியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூருக்கு சென்றார். முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரை விட்டு வெளியேறி தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கிற்கு வியாழக்கிழமை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு தகவல் […]
595 லீற்றர் டீசல் கையிருப்புடன் மன்னாரில் ஒருவர் கைது

இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான ஒரு தொகுதி டீசலை மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சைட்சிட்டி பகுதியில் லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட போது பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 595 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அனுமதியற்ற இந்த டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக லொறி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரிய வந்தது. டீசல் கையிருப்புடன் மன்னார் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் […]
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது, குறித்த மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com […]
75 வீதத்தினால் அதிகரிக்கப்படும் மின்சார கட்டணங்கள்!

இலங்கையில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கான அனுமதியை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன்படி மின்சாரக் கட்டணங்கள் 75 வீதத்தினால் அதிகரிக்கப்படுகின்றன. மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யும் பொருட்டே இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் இந்த கட்டண அதிகரிப்புக்கு உடன்பட்டதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய […]
720,000 திரிபோஷா பொதிகள் தயாரிப்பு

பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை, சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவிக்கையில், சுமார் 720,000 திரிபோஷா பொதிகளை நிறுவனம் தற்போது தயாரித்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவித்தார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் […]
16 பில்லியன் சீனி வரி மோசடி தொடர்பாக சிஐடி விசாரணை ஆரம்பம்!

சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியை 50 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைத்து இலங்கை அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட 1600 கோடி ரூபா இழப்பை ஏற்படுத்தியது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் என்.சி. இலங்கசிங்க முன்னிலையில் நேற்று (08) தெரிவிக்கப்பட்டது . 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோ சீனிக்கு 50 ரூபாவாக இருந்த விசேட பண்டக வரி 25 ரூபாவாக குறைக்கப்பட்டதன் காரணமாக […]