இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு உளவு விமானம்

இந்தியா, டோர்னியர் (Dornier) உளவு விமானம் ஒன்றை இலங்கையின் படைகளுக்கு வழங்கவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாளைய தினம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருந்த சீன உளவு கப்பலான யுவாங் வாங் 5க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த டோர்னியர் உளவு விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ளது. பெரும்பாலும் இந்த விமானம் இந்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 உளவு விமானம், […]

ரூ. 40 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று (10) அதிகாலை 03.30 மணியளவில் அபுதாபியில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்த பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே குறித்த சிகரெட்டுகள் இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 50,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கியிருந்ததாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 40 இலட்சம் எனவும் குறித்த சந்தேக நபர்கள் […]

தங்க கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினர்

ஒரு கோடி இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை தம்பதியினர் நேற்று மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுக்கு இடையே நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் […]

நிரப்பு நிலையங்களின் எரிபொருள் இருப்பு மென்பொருள் மூலம் கணக்கிடப்படுகிறது

QR குறியீடு முறையின்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இதுவரை பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. QR குறியீடு மூலம் நிரப்பு நிலையங்களால் விநியோகிக்கும் அனைத்து எரிபொருள் இருப்புகளும் மென்பொருள் மூலம் கணக்கிடப்படுகின்றன. இதன்படி, ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு குறித்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எழுத்துமூல அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. QR […]

12 அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி நிறுத்தப்பட்டுள்ளது

ஜப்பானிய சர்வதேச நிதியமான ஜெய்க்கா, இலங்கையில் நிதியளித்து வந்த 12 திட்டங்களுக்கான தமது நிதியளிப்பை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, அந்த நிதியம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டாவது முனைய விஸ்தரிப்புக்காக ஜப்பானிய தாய்சேய் நிறுவனத்துக்கான நிதியை ஜெய்க்கா நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஜப்பானின் 12 திட்டங்களுக்கான நிதியை ரத்துச்செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இலங்கை, சர்வதேச […]

மரக்கறி, உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பால் மக்கள் அசௌகரியத்தில்

சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும், நாளாந்த நுகர்வுப் பொருட்களான மரக்கறி உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பு காரணமாக, தாங்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். எரிவாயு விலை குறைக்கப்பட்டதை அடுத்து, இன்று முதல் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், உணவுப் பொதி ஒன்றின் விலை 10 வீதத்தினால்; குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் […]

இன்று முதல் 75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிப்பு

இன்று முதல் மின்சார கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை, இலங்கை மின்சார சபைக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்றைய தினம் வழங்கியிருந்தது. 8 வருடங்களின் பின்னர் மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் 78 இலட்சம் வாடிக்கையாளர்கள், மின்சாரத்தை பெறுகின்றனர். அவர்களில் 67 இலட்சம் பேர் வீட்டுப்பாவணைக்காகவும், ஏனைய 11 லட்சம் பேர் வர்த்தகம் உள்ளிட்ட பொது செயற்பாடுகளுக்காகவும் மின்சாரத்தை பெறுகின்றனர். வீட்டுப் பாவனைக்காக மாதாந்தம் மின்சாரத்தை பெறுவோரில் […]