உள்ளூர் மதுபான வகைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்

உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபான வகைகளின் ஏற்றுமதியினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் மதுபான ஏற்றுமதி மூலம் 2 கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர்கள் வருவாயாக பெறப்பட்டதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிரி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த வருடத்தில் ஏற்றுமதி மூலம் 5 கோடி அமெரிக்க டொலர்களை வருவாயாக பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதேவேளை, இலங்கையில் உற்பத்தியாகும் மதுபான வகைகளின் தர கட்டுப்பாட்டை பேணும் […]

இலங்கையின் வேலையின்மை வீதம் முதல் காலாண்டில் 4.3% ஆக குறைந்தது!

இலங்கையின் வேலையின்மை வீதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4.3 சதவீதமாக குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை போன்றே 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும் வேலையின்மை வீதம் 5.7 சதவீதமாக இருந்ததாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் 373,272 தனிநபர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இது பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகையில் 4.3 சதவீதமாகும். 2022 ஆம் […]

இலங்கை திரும்பிய 4 பேர் மீண்டும் தமிழகத்துக்கு

இலங்கையிலிருந்து மேலும் 4 பேர் ஏதிலிகளாக தமிழகம் சென்றுள்ளனர். குறித்த நால்வரும், தலைமன்னாரில் இருந்து இன்று அதிகாலை படகு மூலமாக இராமேஸ்வரத்தை சென்றடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். திருகோணமலையைச் சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரே தமிழகம் சென்றுள்ளனர். இதனையடுத்து, மண்டபம் கரையோர காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில் குறித்த நால்வரும் 2006 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மண்டபம் முகாமில் தங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு சென்றதாக அவர்கள் […]

புலம்பெயர் பணியாளர்களின் பணவனுப்பல் 50 சதவீதத்தினால் வீழ்ச்சி!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2022 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணவனுப்பல் 50% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் மொத்தமாக 3,777.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். எனினும், இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் 1,889.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை மாத்திரமே அனுப்பியுள்ளனர். மத்திய […]

தாய்லாந்தில் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு

பேங்கொங்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பாதுகாப்புக் காரணங்களினால் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என தாய்லாந்து காவல்துறை ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தலைநகர் பேங்கொக்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ளதாக பேங்கொக் போஸ்ட் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தை சென்றடைந்தார். பேங்கொக்கின் டொன் மியுங் விமான நிலையத்தை, அன்றிரவு 8 […]

போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஏற்பட்ட சேதம் சுமார் 205 மில்லியன் ரூபா என சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவானிடம் அறிவித்துள்ளார். ஜனாதிபதி பிரதமராக இருந்த போது அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ காருக்கு சுமார் 191 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் கைது […]

தாய்லாந்து விசா முடிந்ததும் கோட்டா எங்கு செல்வார் ?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்றும், வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அவர் நாடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது . ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து சென்றுள்ளதாகவும் அங்கு 90 நாட்கள் தங்கவுள்ளதாகவும் அதன்பின் அவர் எந்த நாட்டிலும் தஞ்சம் கோரவில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாய்லாந்து பிரதமர் மனிதாபிமான அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்திற்குள் […]