இந்திய உதவிப்பொருளில் காலாவதியான பால்மா

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி பொருட்களில் காலாவதியான பால்மா பொதிகள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் ஆராய்வதாக உணவு ஆணையாளர் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி ஜே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உணவு பொருட்களில் பால்மா பொதிகள் காலாவதி குறிப்பிடப்படாமல் இருந்தமை தொடர்பில் எமது செய்தி சேவை முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த பால்மா பொதிகள் 3 […]

இன்று எரிபொருள் விலையில் திருத்தம்

இந்த மாதத்தில் இரண்டாவது முறையாகவும் இன்று (15) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்துக்கமைய, உள்ளூரில் எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில், எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக அறிவித்தது. அதற்கமைய, கடந்த முதலாம் திகதி, எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் […]

மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரிப்பு

இன்று (15) முதல் நாளாந்த மின்வெட்டு நேரம் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதி மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் முதல் 3 மணித்தியாலங்களுக்கு தினசரி மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. எவ்வாறாயினும், இன்றும் நாளையும் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்கள் மட்டுமே மின்வெட்டு அமுலாகும் என நேற்று (14) பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தது. எனினும், நுரைச்சோலை மின் உற்பத்தி […]

எரிபொருள் பெற ஒரு எண்ணின் கீழ் பல வாகனங்கள் பதிவு செய்யலாம்!

அதிகளவான வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் தமது வணிகப் பதிவு எண்களுடன் (BRN) தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கான பதிவை பெறமுடியும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் (ICTA தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் வணிகப்பதிவு எண்களின் கீழ், ஒன்று அல்லது பல கைப்பேசி எண்கள் மூலம் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய, http://fuelpass.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து, வணிக பதிவு எண் (BRN) வகையின் […]

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம்

சில அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. எவ்வாறாயினும், தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) இயக்கத்தின் மீதான தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. பயங்கரவாதம் அல்லது வேறு காரணங்களுக்கான தடை விதிக்கப்பட்டிருந்த 6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது. அதற்உலகத் தமிழ் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரஸ் (ATC), ஈழ மக்கள் கூட்டமைப்பு, தமிழ் இளைஞர் […]

இலங்கை பெற்றோருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய கடவுச்சீட்டு

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஏதிலிகள் மறுவாழ்வு முகாமில் 1986ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த பெண்ணை, இந்திய பிரஜை என தீர்ப்பளித்த சென்னை மேல்நீதிமன்ற மதுரைக் கிளை, அவருக்கு கடவுச்சீட்டை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. தற்போது திருச்சி ஏதிலிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் கே.நளினி என்ற பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்ற இந்த தீர்ப்பை அளித்தது. இலங்கையில் உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருந்தபோது, தனது பெற்றோர் இந்தியாவுக்கு வந்ததாக அவர் கூறினார். […]

அரச பணியாளர்கள் 5 நாட்கள் கடமைக்கு

அரச பணியாளர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை காலாவதியானதன் பின்னர் அரச பணியாளர்களை வாராந்தம் 5 நாட்களுக்கும் பணிக்கு அழைப்பது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி குறித்த சுற்றறிக்கை காலாவதியாகவுள்ளது. இதன்படி, குறித்த சுற்றறிக்கை காலாவதியாகுவதற்கு முன்னர் அரச பணியாளர்களை சேவைக்கு அழைக்கும் முறைமை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அந்த அமைச்சின் செலயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்னே தெரிவித்தார். பணிக்கும் செல்லும் அரச பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு கடந்த […]