வாகன இறக்குமதி வருவாய் தொடர்பில் திறைசேரி அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்!

வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் 450 பில்லியன் ரூபாய் வருவாய் இந்த ஆண்டு இறுதிக்குள் அடையப்படும் என்று திறைசேரி அதிகாரிகள் பொது நிதி குழுவில் தெரிவித்துள்ளனர்.

ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம், வாகன இறக்குமதி மூலம் 136 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக இதன்போது அறிவிக்கப்பட்டது.

மேலும், சுங்கத்துறையில் இருந்து சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்