கிளிநொச்சியில் போலி இலக்கத் தகடுகளைத் தயாரித்த ஒருவர்!

போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்ட இடமொன்று சுற்றிவளைப்பட்டதில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சுற்றிவளைப்பின்போது போலியான 15 முன் இலக்கத் தகடுகளும், போலியான 28 பின் இலக்கத் தகடுகளும், அரச முத்திரையுடன் கூடிய 363 ஸ்டிக்கர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர் உதயநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். […]