இரசிகர்களுக்கு ராஷ்மிகாவின் அறிவுரை!

“உங்களுக்கு எந்த விடயம் மகிழ்ச்சியைத் தருகிறதோ அதை செய்யுங்கள்” என நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இரசிகர்களுக்கு அறிவுரை செய்துள்ளார். சமூகவலைத்தளங்களில் இரசிகர்களுடன் அவ்வவ்போது பேசும் அவர் தற்போது ருவிட்டரில் இட்ட பதிவில் மேற்படி கூறியுள்ளார். குறித்த பதிவில், ‘என் தோழி எனக்கு கூறியதை நான் உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு எந்த விடயம் மகிழ்ச்சியைத் தருகிறதோ அதை செய்யுங்கள். அவை பணம் அல்லது அறிவுதரும் துறைகளாக கூட இருக்கலாம். அதில் உங்கள் மனதை செலுத்துங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.